வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நகர்வலம்: இப்படியும் ஓர் அக்கா, இப்படியும் இரு தம்பிகளா!

கவிதாலயா தியேட்டரின் நாடக உலக மறுபிரவேசம் "பெüர்ணமி'யில் தொடங்கியது. இப்போது இரண்டாவதாக "ஒரு கூடை பாசம்' நாடகத்தை மேடை ஏற்றியிருக்கிறார் கே.பி.கலகலப்பான டிராயிங் ரூம் காதல் காமெடி என்று அறிவிப்பு கூறு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:04 pm

சாருகேசி

கவிதாலயா தியேட்டரின் நாடக உலக மறுபிரவேசம் "பெüர்ணமி'யில் தொடங்கியது. இப்போது இரண்டாவதாக "ஒரு கூடை பாசம்' நாடகத்தை மேடை ஏற்றியிருக்கிறார் கே.பி.கலகலப்பான டிராயிங் ரூம் காதல் காமெடி என்று அறிவிப்பு கூறுகிறது. அதை இறுதிவரை அப்படியே காப்பாற்றியிருக்கலாம்.

திருமணம் செய்துகொள்ள விரும்பாத அக்கா. (உங்கள் ஊகம் கரெக்ட். ரேணுகாதான்!) நாடகமே அவளைச் சுற்றித்தான் அமைந்திருக்கும் என்று நீங்கள் ஊகித்தால், உங்கள் இரண்டாம் ஊகமும் மிகவும் சரியானதே. அந்த அக்கா சொன்னால் ஸ்டூல் மேல் ஏறி நிற்கக் கூடத் தயாராக இருக்கும் இரு தம்பிகள் -"சஹானா' கிருஷ்ணாவும், சூரஜும். (எந்தக் காலம் இது கே.பி. சார்?)

துரத்தித் துரத்திக் காதலிக்கும் கமலி, கண்மணி. எந்த விற்பனைப் பெண்மணியை இப்படி வீட்டில் தாராளமாக உள்ளே நுழையவிட்டு உபசாரம் செய்வார்கள் என்று தெரியவில்லை; போகட்டும்.

ப்ரீத்தி (ரேணுகா) கடைசியில் விரும்புகிற ரிஷி-ரகு நல்ல வலுவான பாத்திரங்கள். கலகலப்புக்குக் கலகலப்பு. கதைக்கு அச்சாணி. சோகத்துக்கு சோகம்.

டெலிஃபோன் வெங்கட்ராமன் டிபிகல் மயிலாப்பூர் தாத்தா. இவர் உலகமே நியூஸ் பேப்பரில்தான் இருக்கிறது. நாடகத்தைக் கலகலப்பாக முடித்து வைக்கும் புண்ணியவான் இவர்தான். மாலதி சம்பத், வழக்கம்போல் இயல்பான நடிப்பு.

அங்கங்கே கேட்கும் வயலின் இசை நன்றாகவே இருக்கிறது. கிரிதரனுக்கும், கார்த்திக் ஐயருக்கும் -சபாஷ்.

முழு நாடகத்தையுமே தமாஷாகக் கொண்டு போயிருக்கலாம். கடைசியில் எமோஷனல் சீன் என்று ரேணுகாவை விசும்பி விசும்பி அழ வைத்திருக்க எந்தத் தேவையும் இல்லை. வீல் சேர் தாயார், வயதான தாத்தா என்ற பாரத்தைச் சுமப்பதே கல்யாணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்குப் போதுமான காரணமாக இருக்கையில், அந்த ஐந்து வயது பாலியல் பலாத்கார (பிரசார பாணி) வாக்குமூல அழுகை தேவைதானா?

எதிர்பார்ப்பை அதிகமாக்கி விட்டுவிட்டால், ஏமாற்றம் கொஞ்சமாக இருந்தாலும்கூட அதுதான் கடைசியில் பிரும்மாண்டமாக நம்மைத் தாக்கிவிடுகிறது.

"பரவாயில்லை, பார்த்து வைப்போம்' ரகத்தில் சேர்த்தி என்று பாலசந்தர் நாடகம் இருக்கலாமோ?

செந்தில்குமார் கோபாலன் என்ற இளைஞர் அமெரிக்காவில் நல்ல வேலையில், நல்ல சம்பளம்

பெற்றுக்கொண்டு இருந்தார். நான்கு வருடங்களுக்கு முன் அந்த வேலையை உதறிவிட்டு இந்தியாவுக்கு வந்தார். திருச்சி அருகே தேனூர் கிராமத்தில், தன்னுடைய சேமிப்பை முதலாகப் போட்டு ஓர் அறக்கட்டளை தொடங்கினார். பெயர்: பயிர் ட்ரஸ்ட். "பயிரி'ன் நோக்கம் கிராமப்புற மக்கள் அதிகாரம் பெற்றுச் செயல்படுவதுதான். நடக்கிற காரியமா இது என்று பலரும் கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து விடுவார்கள். செந்தில்குமார் அந்த வகை அல்ல. கிராமங்கள் வளர்ச்சி பெற்று, சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் சக்தி வாய்ந்த அமைப்புகளாக மாற, ஏராளமான பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். "பயிர்' அமைப்பு மூலம்.

இவரைச் சென்னைக்கு அழைத்து வந்து, ரோடரி கிளப் -எஸ்பிளனேட் விருது கொடுத்து, சென்ற வாரம் கெüரவித்தது. இதன் தலைவர் கே.கோவிந்தராஜன் தற்செயலாக ஒரு பத்திரிகையில் "பயிர்' அறக்கட்டளைப் பணிகளைப் பற்றிப் படித்தாராம். தன் ரோட்டரி நண்பர்களையும் அழைத்துக் கொண்டு நேரே தேனூர் போய்ப் பார்த்தாராம். ""எங்களில் பலருக்கு கிராமங்கள் எப்படி இருக்கும் என்றே தெரியாது!'' என்று உண்மையை ஒப்புக் கொண்டார் கோவிந்தராஜன். நம்மால் இப்படி எல்லாம் பிரமாதமாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும் உற்சாகமாகப் பணி செய்பவர்களை ஊக்குவிக்கலாமே என்று தோன்றிற்றாம். அழைத்தார் செந்தில்குமாரை சென்னைக்கு. அக்டோபர் 31 அன்று கன்னிமாரா ஓட்டலில், "பிடியுங்கள் விருதை!' என்று கொடுத்துவிட்டார். சுற்றுலாச் செயலர் இறையன்பு, செந்தில்குமாரின் காந்திய வழிமுறையைப் பெரிதும் பாராட்டினார்.

"பயிரி'ன் திட்டங்களுக்கு இந்த ரோட்டரி கிளப் பல வகைகளில் உதவ உறுதியளித்திருக்கிறது. முதலில் "பயிர்' அமைப்பு நடத்தும் கிராமப் பள்ளிக்கூடத்துக்குக் கூரையை மாற்றிக் கொடுக்கப் போகிறது. குழந்தைகளுக்கு உடை தரப் போகிறது. பெண்மணிகளுக்கும் ஆடைகள், துணிகள் திரட்டி வழங்கப் போகிறது. அங்கே நடத்தப் போகும் மருத்துவ முகாம்களில் பங்கெடுத்துக் கொள்ளப் போகிறது. இத்தோடு ரோட்டரி-எஸ்பிளனேட் நின்றுவிடவில்லை. சென்னை அருகே உள்ள கூத்தம்பாக்கம் கிராமத்தை எடுத்துக்கொண்டு, அதன் முன்னேற்றத்துக்காக முதல்

கட்டமாகப் பத்து லட்ச ரூபாய் செலவிடப் போகிறது.

"முழுமையான கிராம முன்னேற்றம்' என்ற திட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு செயல்படத் துவங்கிய முதல் தொண்டு நிறுவனம் "பயிர்'தான் என்றார் செந்தில்குமார். அதனால், "உங்கள் மனத்தை மட்டும் திறந்தால் போதாது. பர்ஸýகளையும் தாராளமாகத் திறவுங்கள்!' என்று கேட்டுக் கொண்டார் செந்தில்குமார் கோபாலன்.

செந்தில்குமார் மெகானிகல் இஞ்சினீயராகப் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் மிஷிகன் நகரில் லாசன் நிறுவனத்தில் 30 இஞ்சினீயர்கள் கொண்ட குழுவை நிர்வகித்தவர். பிறகு அதன் சென்னை பிரிவையும் நிறு

வினார். 2005 முதல் "பயிர்' குழுவின் கீழ்மட்டத்திலிருந்து கொண்டு உழைப்பவர்களின் உயிர்நாடியாகத் துடிப்புடன் இயங்கி வருகிறார். இதே நிகழ்ச்சியில் ஹேமு ராமை

யாவுக்கும் தொழிற்பயிற்சி சாதனையாளர் என்ற விருதை வழங்கினார்கள்.

பாரத் சங்கீத உத்சவ் (நாரதகான சபாவில்) இசைக் கலை நிகழ்ச்சிகளை அமர்க்களமாக நடத்தி வருகிறது. ஒரு நிகழ்ச்சி மிக வித்தியாசமாக இருந்தது.

கலாúக்ஷத்திரா நடனக் கலைஞர்கள் ஷீஜித் கிருஷ்ணாவும் அஞ்சனா ஆனந்தும், "அட பிரமாதமா இருக்கே!' என்று அசர வைத்தது நடன நிகழ்ச்சி. சுவாரசியத்துக்குக் கூடுதல் காரணம், கெüரி ராம்நாராயணன் இயல்பாக, நகைச்சுவை கலந்து, வழங்கிய இணைப்புரை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.