ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கலைக்கு மொழி தடை இல்லை

கலைஞர்கள் நாடு, மதம், இனம், மொழி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பார்கள். அதிலும், கை வினைக் கலைஞர்கள் என்றால் தங்களது கைத்திறத்தால் காண்போரையெல்லாம் கவரச் செய்து விடுவர். இந்தியாவின் ஏதோ ஒரு கடைக்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:03 pm

வே.சுந்தரேஸ்வரன்

கலைஞர்கள் நாடு, மதம், இனம், மொழி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பார்கள். அதிலும், கை வினைக் கலைஞர்கள் என்றால் தங்களது கைத்திறத்தால் காண்போரையெல்லாம் கவரச் செய்து விடுவர்.

இந்தியாவின் ஏதோ ஒரு கடைக்கோடியில் பிறந்திருந் தாலும் தங்களது கலைத்திறனால் பிற மாநில மக்களைக் கவர்ந்து வருகின்றனர் வடகிழக்கு பிராந்திய மாநிலப் பெண்கள். அசாம், நாகலாந்து, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் மாநிலம், மொழிகளைக் கடந்து தாங்கள் சார்ந்த மாநிலத்தின் பழமையான, பாரம்பர்ய விஷயங்களை பலருக்கும் கைவினைப் பொருள்கள் மூலம் எடுத்துச் சென்ற வண்ணம் உள்ளனர்.

மதுரையில் நடைபெற்று வரும் கைவினைப் பொருள் கண்காட்சியில் தங்களது பாரம்பரிய கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில், கண்காட்சி வளாகத்திலேயே உடனுக்குடன் துணியை நெய்து அவர்கள் தருவதைக் காண முடிந்தது. இதுபோன்ற துணி நெசவில் ஈடுபட்டிருந்த அசாம் மாநிலம், துப்ரி மாவட்டத்தைச் சேர்ந்த ரீட்டாவிடம் (38) பேசினோம்.

""எங்கள் குடும்பத்தினர் கோதுமை சாகுபடி செய்கின்றவர்கள். ஆனாலும், எங்கள் மாநிலத்தில் பெண்கள் ஏதாவது ஒரு கைத்தொழிலைக் கற்று இருந்தால்தான் திருமணம் முடிக்கஆடவர்கள் விரும்புவர்.

எனக்கு 12 வயதில் இருந்தே துணி நெசவு செய்வதில் ஆர்வம் உண்டு. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். ரூ.200-லிருந்து ரூ.1200 வரை விலையுள்ள தரமான சால்வை துணிகளை நெய்து விற்கிறேன். பொதுவாக, படுக்கை விரிப்பு, துப்பட்டா, ஷால் மற்றும் பெண்களுக்கான பிரத்யே மேலாடைகளை அழகிய டிûஸன்களுடன் வடிவமைத்துத்  தருகிறோம். ஒரு துணியை நல்ல வேலைப்பாட்டுடன் நெய்வதற்கு குறைந்தது 3 நாளில் இருந்து 5 நாள்கள் ஆகும். நாளொன்றுக்கு ரூ.200 கிடைக்கும். தொடர்ந்து தொழில் இருந்துகொண்டே இருக்கும். எனது கணவர் விவசாயி. மகள் 11-ம் வகுப்பும், மகள் 8-ம் வகுப்பும் படிக்கின்றனர். அவர்களுக்கும் துணி நெய்யத் தெரியும். குழந்தைகள் படிப்பதற்கு விரும்பினாலும், அவர்களும் ஏதேனும் ஒரு கைத் தொழிலைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்த கைவினைப் பொருள் கண்காட்சிக்காக ஹைதராபாத், புனே,  பெங்களூர், புதுவை உள்பட பல்வேறு தென்னிந்திய மாநிலங்களுக்குச் சென்று வந்துள்ளேன். கடந்த மே மாதம் ஊரிலிருந்து நான் உள்பட சிலர் புறப்பட்டோம். கண்காட்சிக்காக பல்வேறு இடங்களுக்குச் சென்றுகொண்டே இருக்கிறோம். இதன்மூலம் குழந்தைகளின் படிப்புக்கான தொகையைச் சேமிக்க முடிகிறது. சொன்னால் நம்பமாட்டீர்கள்...    கடந்த 4 மாதத்தில் ரூ.40 ஆயிரம் வரை சேமித்துவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இந்தக் கைவினைக் கண்காட்சி மூலம் எனது மாநிலத்தின் கலாசாரப் பெருமையையும், அங்குள்ள கலைத் திறமை யையும் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடிகிறது என்ற மன மகிழ்ச்சியும் எனக்கு ஏற்படுகிறது. ஒருபுறம் பணமும் சம்பாதிக்க முடிகிறது.

இதற்கு மத்திய அரசின் கைவினைப்பொருள் மேம்பாட்டு ஆணையம் எங்களுக்கு உதவி அளிக்கிறது என்பதையும் நாங்கள் நினைவுகூர்ந்தாக வேண்டும். எங்களுக்கு ஹிந்தி மொழி மட்டும்தான் தெரியும். ஆனாலும் கலைஞர்களுக்கும், கலைக்கும் மொழி ஒரு தடையில்லை என்பதை நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் உணர முடிகிறது என்றார் அவர்.

  மணிப்பூர் இம்பாலைச் சேர்ந்த மற்றொரு நெசவுக் கைவினைஞர் நீவோ (45)விடம் பேசினோம்:

""நான் 36 ஆண்டுகளாக இந்தக் கலைநயமிக்க ஆடைகளை வடிவமைப்பதிலும், நெய்வதிலும் ஈடுபட்டு வருகிறேன். இந்த வேலை எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. நான் பிறந்த மாநிலம் மட்டுமன்றி இந்தியாவில் உள்ள பிற மாநில மக்களையும் சந்திக்கவும், எனது மாநிலத்தின் கைவினைப் பொருள்களை அளிக்கவும் ஒரு வாய்ப்பாக இருப்பதாகவே நினைக் கிறேன்'' என்றார்.

நாகலாந்தைச் சேர்ந்த லெனோ (35), கோஹினி (37) ஆகியோர் கூறுகையில், "சுற்றுச்சூழலுக்கு உகந்த உலர் மலர்களையும், குச்சிகளையும் வைத்து செயற்கை பூக்களை உருவாக்கி விற்கிறோம். தமிழகத்தில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. நாளொன்றுக்கு 300 ரூபாய் கிடைக்கிறது. ஒரு குழுவாக நாங்கள் வந்துள்ளதால் மொழி ஒரு தடைக்கல்லாக இல்லை. கைவினைப் பொருள்களுக்கு தென்னிந்திய மக்கள் ஆதரவு அளிப்பது எங்களை ஊக்குவிப்பதாக உள்ளது'' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.