ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆல் ரவுண்டர் ஆஃப் ஆலங்குளம்!

கண்களில் பலர் ஒரு குறிப்பிட்ட துறையை எடுத்துக்கொண்டு அதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி சாதனை படைப்பர். ஆனால் கலை, அறிவியல், விளையாட்டு எனப் பல துறைகளில் சாதிக்கிறார் இந்த நெல்லை கல்லூரி மாணவி. அ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:23 pm

வை. இராமச்சந்திரன்

கண்களில் பலர் ஒரு குறிப்பிட்ட துறையை எடுத்துக்கொண்டு அதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி சாதனை படைப்பர். ஆனால் கலை, அறிவியல், விளையாட்டு எனப் பல துறைகளில் சாதிக்கிறார் இந்த நெல்லை கல்லூரி மாணவி.

அவர் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வீராணத்தை சேர்ந்த  பி.சுபசங்கரி. இவர் குற்றாலம் பராசக்தி கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் படித்தவர். இவரது தந்தை பழனிச்சாமி ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை பகுதியில் தனிப்பிரிவு புலனாய்வுத் துறை தலைமைக் காவலராக உள்ளார்.

கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுதல், ஓவியம் வரைதல்,யோகா போட்டிகளில் சாதனை படைத்தல் எனப் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி,100க்கும் அதிகமான சான்றிதழ்களும் விருதுகளும் பெற்றவர். அவரைச் சந்தித்த போது..



கதை, கவிதை, கட்டுரை எழுதுவதற்கு ஆர்வம் வந்தது எப்படி?

எனக்கு சிறுவயது முதலே தாக்கத்தை ஏற்படுத்தியவர் அன்னை தெரசா. நான் செவிலியர் படிப்பு படித்து அவரை போன்று சேவை தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதுதான் முதலில் விருப்பமாக இருந்தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் படிக்க இயலாமல் போனது. பள்ளி பருவத்திலே, நான் எழுதிய முதற்கவிதை அன்னை தெரசாவை பற்றியதுதான்.

மரங்கள் வெட்டப்பட்டு அந்த இடத்தில் கட்டிடம் எழுப்பும் செயலைக் கண்டித்தல் போன்ற சமூக சிந்தனையுடன் கூடிய பல கவிதைகள், பல சிறுகதைகள்,அறிவியல் சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

ஓவிய ஈடுபாடு குறித்து?

பள்ளியில் படிப்பில் கவனம் செலுத்தியதைவிட படம் வரைவதிலேயே அதிகம் கவனம் செலுத்துவேன். என் பள்ளி ஆசிரியை உமா, எனது ஆர்வத்தைக் கண்டு, நான் ஓவிய போட்டிகளில் கலந்து கொள்ள எனக்கு நல்ல ஊக்கம் தந்தார். நோட்டு புத்தகங்களிலே சுமார் 700 படங்கள் வரை வரைந்திருப்பேன். ஆனால் அப்போதெல்லாம் அதிக போட்டிகளில் பங்கேற்றதில்லை. கல்லூரி பருவத்திற்கு வந்த பின்பே அதிக போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளை அடைந்தேன்.

ஓவியப்போட்டியில் பெற்ற பரிசுகள் பாராட்டுகள் பற்றி சொல்லுங்கள்?

தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலைபாதுகாப்பு வாரவிழாவையொட்டி நடந்த ஓவியப்போட்டியில் முதல்பரிசு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியிலும், ஓவியக் கண்காட்சியிலும் முதல் பரிசு பெற்றுள்ளேன். அவர்கள் வெளியீடான நுகர்வோர் கவசம் என்ற புத்தகத்தில் என்னுடைய ஓவியம் பிரசுரமாகியுள்ளது. அவள் விகடன் இதழ் சார்பில் கல்லூரியில் நடந்த கேம்பஸ் திருவிழாவில்,ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளேன். கடந்த ஆண்டு நடைபெற்ற வன உயிரின வாரவிழாவையொட்டி, கல்லூரி அளவில் நடந்த ஓவியப் போட்டியில் மாநில அளவில் முதல்பரிசு பெற்றேன்.

ஓவியம் மட்டுமின்றி கார்ட்டூன் வரைவதிலும் ஆர்வம் உண்டு. அதற்குக் காரணம் சிறுவயதில் டிவியில் வரும் ராணுவின் கார்ட்டூன் நேரம் என்ற நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பேன். குற்றாலம் ரோட்டரி கிளப் சார்பில் 12 கல்லூரிகள் பங்கேற்ற, பூக்களை வைத்துக் கோலம் போடும் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றேன். டெல்லி திருவள்ளுவர் மாணவர் தமிழ்ச் சங்கம், சென்னை கலாகேந்திரா நடத்திய கார்ட்டூன் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.

ஈடுபாடு உள்ள மற்ற துறைகள்?

பொதுவாக பெண்கள் பெரும்பாலும் மிமிக்கிரி(பலகுரல்) செய்வது இல்லை. ஆனால் எனக்கு பள்ளி பருவம் முதலே, மிமிக்கிரி செய்வதிலும் அதிக ஆர்வம் உண்டு. பறவைகள், விலங்குகள், வித்தியாசமான இசை ஒலி ஆகியவற்றை பல குரலில் பேசுவேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் மிமிக்கிரி செய்துள்ளேன்.திருநெல்வேலி அகில இந்திய வானொலியிலும் தூத்துக்குடி வானொலியிலும் மிமிக்கிரி நிகழ்ச்சிகளில் கலந்துள்ளேன்.

திருநெல்வேலி ஹலோ எப்.எம். ல்,கல்லூரி மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் காலேஜ் செமஸ்டர் என்ற நிகழ்ச்சியில், ஃபீலிங்கார்னர் என்ற புரோகிராம் செய்தேன். எங்கள் கல்லூரியில் லைப்ரரி கிளப் சார்பில் நடைபெற்ற ஆல்பம் பிரிப்பரேஷன் போட்டியில், காமராஜர் குறித்த ஆல்பம் தயார் செய்து போட்டியில் பங்கு கொண்டேன்.

தங்களின் விளையாட்டுத் திறமைகள் குறித்து...?

விளையாட்டிலும் ஆரம்ப காலத்தில் இருந்தே ஆர்வம் உண்டு. ஓட்டம், கால்பந்து, கைபந்து விளையாடுவேன். பல்கலைக்கழக அளவில் எங்கள் கல்லூரி அணி சார்பில் கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ளேன். அதே போல் கல்லூரி அளவில் கோகோ, பேட்மிட்டன், கூடைப்பந்து, கபடி போன்ற போட்டிகளில் பங்கேற்று பரிசுளைப் பெற்றுள்ளேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.