சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நகர்வலம்: சாரீர சாதகம்

கர்நாடக சங்கீதம் பாடுபவர்க ளுக் குக் குரல் வளம் இல்லா விட்டா லும் பரவா யில்லை, ஞானம் மட் டுமே போதும் என் கிற காலம் எல் லாம் கடந்து போய் விட்டது. என்ன தான் புதுப் புது உத்திகள் கைவசம் இருந்தா லும் அவை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:06 pm

சாருகேசி

கர்நாடக சங்கீதம் பாடுபவர்க ளுக் குக் குரல் வளம் இல்லா விட்டா லும் பரவா யில்லை, ஞானம் மட் டுமே போதும் என் கிற காலம் எல் லாம் கடந்து போய் விட்டது. என்ன தான் புதுப் புது உத்திகள் கைவசம் இருந்தா லும் அவை அவ்வப் போது  ரசிக ரின் புருவத்தை வியப் பில் உயர்த்த உத வுமே தவிர, குரல் மட் டும் கவர்ச்சி யாக இல்லை என் றால் பாட் டைக் கேட்க ஆட்கள் இருக்க மாட் டார்கள்!

இசை யைப் பயி லும் போதே குர லும் ஒழுங் காக ஒத் து ழைக் கும்; அத னால் தனியே குரல் பயிற்சி அவ சிய மில்லை என்று சொல்கிறவர்க ளுக் குப் பதில் சொல் கிற மாதிரி, "சாரீர சாதகம்' என்ற டிவி டியை வெளி யிட்டி ருக்கி றார் முன் னாள் சென் னைப் பல்க லைக்கழக இசைத்து றைத் தலைவ ரும், இசைத் துறை ஆராய்ச்சியாள ரும் நிபுணரு மான டாக்டர் எஸ்.ஏ.கே. துர்கா. உல கின் பல் வேறு நாட்டு இசை நுட்பங்க ளைக் கற் றுத் தேர்ந்த "எத்னோ- மியூசிகால ஜிஸ்ட்' இவர்.

டாக்டர் துர்கா வோடு இணைந்து இந்த டிவிடி யைத் தயா ரிப்ப தில் முக்கியப் பங்கு வகித்தவர் ராமச்சந் திரா மருத்துவக் கல்லூ ரிப் பேராசிரியர் டாக்டர் பிர காஷ் பூமி நாதன். "நான் நானூ றுக் கும் மேற்பட்ட இசைக் கலைஞர்க ளைப் பேட்டி கண் டேன். நிறைய தகவல்க ளைச் சேக ரித்த பிறகே டாக் டர் துர்காவுடன் இந்த முக்கிய மான டிவிடி தயா ரிப் பில் அவ ருக்கு உதவி னேன்!' என்ற டாக்டர் பூமிநாதன் விஞ்ஞானரீதியாகக் குரல் வளத் துக்கு உத வும் உறுப் புக ளின் பங்கு குறித்து விளக்கி னார்.

முதல் டிவிடி-ஐ மியூ சிக் அகடமி தலைவர் முரளியிடமி ருந்து பெற் றுக் கொண்டவர் பாலமுரளிகி ருஷ்ணா. "நான் பாட வந்த காலத் தில் எல் லாம் இப்ப டிப்பட்ட முயற்சிகள் கிடை யாது. எனக் குச் சங்கீதமே தெரி யாது. ஆனால் சங்கீதத் துக்கு என் னைத் தெரிந்தி ருந்தது. இன் றைக்கு வரை எப்ப டியோ பாடிக் கொண்டு வந்து விட் டேன். நாளை எப்ப டியோ?' என் றார் மெலி தான நகைச்சுவை யோடு.

முப்பது ஆண்டுக ளுக்கு முன் தாம் சந் தித்த போது எத்தனை சுறுசு றுப் பாக இருந் தாரோ அப்ப டியே இப்போ தும் டாக்டர் எஸ்.ஏ.கே.துர்கா இயங்கி வருவ தைப் பாராட்டி னார் டாக்டர் பப்பு வேணுகோ பால் ராவ்.

"சுருதி' மாத இத ழின் பொறுப் பாசிரியர் எஸ்.ஜானகி, டிவிடி- யில் கூறப்பட்டி ருக் கும் பயிற்சிகளை விளக்கி னார். ஆ, ஊ போன்ற உயிரெ ழுத் துக்களை உச்ச ரிக் கும் போது மட்டு மின்றி, சப்தத்தை வெளிக் கொண்டு வரும்போ தும் அவை அழ காக அமைய பயிற்சி உத வும் என் றார். "கற் றுக் கொள் ளும் டெக் னிக் (உத்தி) வேறு; பாடும் போது பயன்ப டுத்த வேண் டிய உத்தி வேறு' என் றார் ஜானகி.

"சுருதி சுத்தமாகப் பாட வேண் டும் என் றால் இந்தக் குரல் வளப் பயிற்சி மிக முக்கியம். யோகா பயிற்சி எப்படி உடல் நலத் துக்கு உதவுகிறதோ, அது போல குரல் பயிற்சி குரல் வளத் துக்கு உத வும். ஒரு ஸ்தா யியிலி ருந்து இன் னொரு ஸ்தா யிக்கு எளி தாக மாற இந்தப் பயிற்சி நல்லது. "டயாஃப்ரம்' எனப்ப டும்  மார் புக் கும் வயிற் றுக் கும்  இடையே உள்ள தடித்த தசைச் சுவ ரைப் பயன்ப டுத் திப் பாடுவது நல்லது.

முழுத் தொண்டையை யும் உபயோ கித் துப் பாடுவது இயற்கையானது. இதில் உள்ள பயிற்சிகள் எல் லாமே இளையதலைமு றைக் கலைஞர்க ளுக்கு ஏற்றவை. வய லின், புல் லாங்குழல், வீணை எல் லாம் சுருதி யோடு ஒத்தி சைந்து கேட்க வேண் டும் என்று நாம் வற்பு றுத் தும் போது, பாடு கிற குரல் மட் டும் சுரு தியிலி ருந்து விலகி னால் எப்படி ஏற்பது?' என்று விளக்கமாகப் பேசி னார்.

ஏதோ வட நாட்டு இசைக் கலை ஞர்கள் தான் குர லுக்கு முக் கியத்துவம் கொடுப் பார்கள், கர்நாடக இசைக் கலைஞர்க ளுக்கு அது இரண் டாம்பட்சம் என்ற குற்றச் சாட்டு இனி எழாது என நம்பு வோம்!

வணிக நோக்கம் இன்றி இதை வெளி யிட்ட சுவாதி சாஃப்ட் சொல்யூஷன் நிறுவனத் தைப் பாராட்டி னார் முரளி.

தியாகராஜர், தீட்சிதர் ஆகியோ ரின் சமகாலத்து வாக்கேயகாரர் (பாட லும் எழுதி மெட் டும் அமைப் பவர்) சியாமா சாஸ் திரி. அவர் எழுதி இசைய மைத்த பாடல்கள் மிகக் குறைவு. நான்கு தமிழ் கீர்த்தனைகளை யும் எழுதியி ருக்கி றார்.

அவர் நினை வாக மியூ சிக் அகடமி யில் நடந்த இசை நிகழ்ச்சி யில், பூஷணி கல்யாணராமன் பாடி னார். (டாக்டர் ஹேமலதா வய லின், கல்லி டைக்கு றிச்சி சிவகு மார் மிருதங்கம். நிகழ்ச்சி யின் வெற் றிக்கு இவர்கள் முக் கிய காரணம்.) சியாமா சாஸ்திரி யின் கீர்த்தனைகள் மெது வான நடை யில் பாடப்ப டும் போது கேட்க மிக இத மாக இருக் கும். பூஷணி கல்யாணராமன் அதை மறந்துவிடாமல் கடைப்பி டித் தார். "தேவி ப்ரோவ சமய மிதே' (ராகம்; சிந்தாமணி) "நன்னு ப்ரோவு லலிதா' (ராகம்: லலிதா) இரண் டுமே மனத் தைத் தொட்டன.

முசிறி வீட் டுக் கச் சேரி என் றால் அதில் ஒரு தனித்தன்மை இருக் கும். பாடக ருக் கும் ரசிக ருக் கும் இடை வெளி அதிக மில் லாத நெருக்கம் தான் அது.

அம் ருதா வெங்கடே ஷின் இசை நிகழ்ச்சி யில் அவசரமோ, ஆர்ப் பாட்டமோ இல் லாத அமைதி இருந்தது. எனவே அதில் கசிந்த இனி மையை நுகர முடிந்தது.

எம்.டி.ராமநாத னின் கேதார ராகப் பாடல் "தியாக ராஜ குரும் ஆச்ரயே'; தீட்சித ரின் ஹிந் தோள ராக கீர்த்தனை "நீர ஜாக்ஷி காமாக்ஷி'; பாப நாசம் சிவ னின் "கா வா

வா' என்ற வராளி ராகப் பாடல். சியாமா சாஸ்திரி யின் மத்தியமாவதி ராக "பாலிஞ்சு காமாட்சி', ஜி.என்.பி.யின் சரஸ்வதி ராகப் பாடல் "சரஸ்வதி நமோஸ் துதே', "ஹெச்ச ரிக' என்ற தியாகராஜ ரின் யதுகுல காம் போதி பாடல், சுவாதி திரு நாள் இயற் றிய "சார சாட்ச' என்ற பந் துவ ராளி கீர்த்தனை, சுப்ப ராய சாஸ்திரி யின் முகாரி ராகப் பாடல் "ஏம நின்னே', பெஹாக் ராக சுவாதி திரு நாள் பாடல் "ஸ்மரஜன', தீட்சித ரின் குறிஞ்சி ராகப் பாடல் "ஸ்ரீவேணுகோ பால', புரந்தரதாச ரின் பீலு ராகக் கவிதை "கரு ணிதோ' ராம லிங்க சுவா மிக ளின் "ஒருமையுடன் நினது திருமலரடி' எனத் தேர்ந்தெ டுத்த பாடல்க ளால் இசைமழை வழங்கி னார் அம் ருதா.

குர லில் நயம், குழைவு. ஆலாபனை யில் அபார கற்பனை வளம். வய லின் வாசித்த வி.எல்.குமா ரும், மிருதங்கம் வாசித்த மன் னார் கோயில் பாலாஜி யும் உறுதுணை யான பக்க வாத்தியங்க ளாக அமைந் தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.