டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

எல்லோரும் எனக்கு முன்மாதிரிதான்!

 த்ரோபால் எனப்படும் எறிபந்து விளையாட்டில் தமிழக வீராங்கனைகள் தற்போது அதிக அளவில் பிரகாசித்து வருகின்றனர். இதற்கு சரியான எடுத்துக்காட்டு சென்னையைச் சேர்ந்த வீராங்கனை ராஜஸ்ரீ!  சமீபத்தில் நடந்து முடிந்த

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:38 am

வா.சங்கர்

 த்ரோபால் எனப்படும் எறிபந்து விளையாட்டில் தமிழக வீராங்கனைகள் தற்போது அதிக அளவில் பிரகாசித்து வருகின்றனர். இதற்கு சரியான எடுத்துக்காட்டு சென்னையைச் சேர்ந்த வீராங்கனை ராஜஸ்ரீ!

 சமீபத்தில் நடந்து முடிந்த தேசிய த்ரோபால் போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற ராஜஸ்ரீ, தமிழக அணிக்காக கோப்பையைத் தட்டி வந்துள்ளார்.

 ஏராளமான மாநில அளவிலான போட்டிகள், தேசியபள்ளிகள் விளையாட்டுப் போட்டியிலும் முத்திரை பதித்திருக்கும் ராஜஸ்ரீ, சென்னை சூளைமேட்டிலுள்ள டிஏவி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை ரமேஷ் கண்ணா, தாய் ரீனா இருவரும் மகளின் விளையாட்டு ஆர்வத்துக்கு ஊக்கமாக உள்ளனர். இசை, பரதநாட்டியம் போன்ற கலைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல், தட களப் போட்டிகளிலும் பங்கேற்று அசத்தி வருகிறார்.

 நேரு ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராஜஸ்ரீயிடம் பேசியபோது...

 சமீபத்தில் மும்பையில் நடந்த தேசிய த்ரோபால் போட்டியில் தமிழக அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளீர்கள். இது எப்படி சாத்தியமானது?

 எனக்கு த்ரோபால் மிகவும் பிடிக்கும். பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும்போது த்ரோபால் விளையாடத் துவங்கிவிட்டேன். பள்ளியில் எனக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் விமலாதேவி, கண்ணன் ஆகியோர் எனக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்தனர். இயற்கையாகவே எனக்கு த்ரோபால் விளையாட்டு பிடித்திருந்ததும் ஒரு காரணம்.

 முதலில் மாவட்ட போட்டி, மாநில போட்டிகள் என தேசியப் போட்டி வரை வந்துவிட்டேன். சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனது மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். எப்படியாவது கடும் பயிற்சி மேற்கொண்டாவது தமிழக அணியை தேசியப் போட்டியில் வெற்றி பெற வைக்க நினைத்தேன். அதை நடத்தியும் காட்டினேன்.கேப்டன், சக வீராங்கனைகள் தந்த ஒத்துழைப்பில் ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக விளையாடியதால் கோப்பையும் வசமானது.

 தமிழக அணிக்குத் தேர்வானது எப்படி?

 ஒவ்வொரு தேசியப் போட்டி வைக்கும்போதும் தமிழக த்ரோபால் சங்கத்தின் சார்பில் தேர்வுப் போட்டி நடத்தப்படும். அந்தத் தேர்வுப் போட்டியில் சிறப்பாக விளையாடி தமிழக அணிக்குத் தேர்வாகி தேசியப் போட்டியில் பங்கேற்றேன்.

 எந்த வயதிலிருந்து த்ரோபால் விளையாடத் துவங்கினீர்கள்?

 எனக்கு 10 வயதாக இருக்கும்போதே த்ரோபால் விளையாடத் துவங்கிவிட்டேன். எல்லா விளையாட்டுகளும் பிடிக்கும். த்ரோபால் மிகவும் பிடிக்கும். அப்பாவிடம் சொன்னேன். அம்மாவும், அப்பாவும் சரியென்று சொல்லவே த்ரோபாலைத் தேர்ந்தெடுத்தேன்.

 பயிற்சி நேரம்....

 காலையில் 2 மணி நேரம் மாலையில் 3 மணி நேரம் என பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். தேசியப் போட்டிகளுக்குச் செல்லும்போது பயிற்சி நேரம் அதிகரிக்கும்.

 பெற்ற வெற்றிகள்?

 2010-ல் நடந்த 56-வது தேசிய பள்ளிகள் விளையாட்டு, 2011-ல் கன்னியாகுமரியில் நடந்த சப்-ஜூனியர் போட்டி, ஹொசங்காபாதில் 2011-ல் நடந்த தேசிய சப்-ஜுனியர், 2011-ல் நடந்த தென் மண்டல போட்டிகள், குவாலியரில் 2011-ல் நடந்த 57-வது தேசிய பள்ளிகள் விளையாட்டு, அதே ஆண்டில் கன்னியாகுமரியில் நடந்த மாநில சீனியர் த்ரோபால் போட்டி.

 2012-ல் 9-வது மாநில ஜூனியர் போட்டி, நீலகிரியில் நடந்த 6-வது சப்-ஜூனியர் போட்டி, சமீபத்தில் நடைபெற்ற தேசிய த்ரோபால் போட்டி என பல போட்டிகளில் பங்கேற்று கோப்பையைத் தட்டி வந்துள்ளேன்..

 விருதுகள் பெற்றுள்ளீர்களா?

 பல போட்டிகளில் சிறந்த வீராங்கனை விருது பெற்றுள்ளேன். சமீபத்தில் நீலகிரியில் நடந்த 6-வது சப்-ஜூனியர் போட்டியில் சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றதற்காக எனக்கு சிறந்த வீராங்கனைக்கான விருது கிடைத்தது. இது எனக்கு மறக்க முடியாத விருதாகும்.

 உங்களுக்கு ஊக்கம் அளிப்பவர்கள்?

 எனது தாய், தந்தை ஆகியோர் அதிக அளவில் ஊக்கம் அளிப்பவர்கள். அதைப் போலவே பள்ளி செயலர் ஜெயதேவ்ஜி, முதல்வர், ஆசிரியர்கள் என அனைவரும் ஊக்கப்படுத்துவர். தமிழ்நாடு த்ரோபால் சங்கத்தின் செயலர் பாலவிநாயகம் தகுந்த ஆலோசனைகளைக் கூறி போட்டிகளின் போது வழிகாட்டுவார். அருகில் இல்லையென்றாலும் தொலைபேசியிலாவது கூப்பிட்டு வாழ்த்து சொல்வார்.

 உங்களுடைய முன்மாதிரி?

 இந்த விளையாட்டில் எனக்கு யாரும் முன்மாதிரி என்று இல்லை. ஆனால் த்ரோபால் விளையாடும் ஒவ்வொருவரையும் எனக்கு முன்மாதிரியாகத்தான் நினைக்கிறேன். ஒவ்வொருவரிடமும் ஒரு ஆட்ட நுணுக்கம் வெளிப்படும். அதை உன்னிப்பாக நான் கவனிப்பேன். போட்டி நடந்துகொண்டிருக்கும் போதே எதிரணியில் இருப்பவர்களின் டெக்னிக்குகளை, பந்தை எறியும் திறன் ஆகியவற்றை உற்று கவனித்து அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்துவேன். இதை அவர்கள் நிச்சயம் எதிர்பார்க்க மாட்டார்கள். இதுவும் ஒருவிதமான

 ஆட்டத் திறன்தான்!

 எதிர்காலத் திட்டம்?

 அதிக அளவிலான தேசியப் போட்டிகளில் பங்கேற்கவேண்டும். விரைவில் தேசிய அணியில் இடம்பிடிக்கவேண்டும். ஆசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும்.

 எதிரணியில் இருப்பவர்களின்

 டெக்னிக்குகளை, அவர்களுக்கு

 எதிராகவே பயன்படுத்துவேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.