மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

காந்தி கையெழுத்தின் விலை

காந்தியடிகள் ஒரு முறை கோவைக்கு வருகை தந்தார். அப்போது கோவையில் டாக்டர் சர்.ஆர்.கே. சண்முகம் இல்லத்தில் தங்கினார். ஒரு நாள் காந்திஜியின் நிழற்படம் ஒன்றை அவரிடம் எடுத்துக்கொண்டு போய் அதன் அடியில் கையெழு

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:14 pm

காந்தியடிகள் ஒரு முறை கோவைக்கு வருகை தந்தார். அப்போது கோவையில் டாக்டர் சர்.ஆர்.கே. சண்முகம் இல்லத்தில் தங்கினார். ஒரு நாள் காந்திஜியின் நிழற்படம் ஒன்றை அவரிடம் எடுத்துக்கொண்டு போய் அதன் அடியில் கையெழுத்துப் போடும்படி ஆர்.கே.எஸ். கேட்டுக் கொண்டார். காந்தியடிகள் ""என்னுடைய கையெழுத்தை இந்தப் புகைப்படத்தில் இட வேண்டுமானால் அதற்குச் சரியான விலையைக் கொடுக்கத் தாங்கள் தயாரா?'' என்று கேட்டார். ""விலை கொடுக்கத் தயார்; எவ்வளவு தொகை கேட்கிறீர்கள்?'' என்றார் ஆர்.கே.எஸ். ""பணம் எதுவும் வேண்டாம்; நான் கேட்கும் ஒரு வாக்குறுதியைக் கொடுத்தால் போதும்'' என்றார் அடிகள். ""நாள்தோறும் அரைமணி நேரத்திற்கு குறையாமல், கைராட்டையால் நூல் நூற்பதாக வாக்குறுதி தர வேண்டும்'' என்றார் மகாத்மா. ஆர்,கே.எஸ். சற்றே சிந்தித்துவிட்டு,""இது என்னால் இயலாத காரியம். என்னை மன்னியுங்கள்'' என்றார். காந்திஜி புன்னகையுடன்,""தங்கள் உண்மையை நான் பாராட்டுகிறேன். வாக்கு கொடுத்துவிட்டு தவறுவதைவிட இயலாமையை ஒப்புக்கொண்டதே மேல்'' என்றார். ""நான் உண்மையைப் பேசினதை விலையாக வைத்துக்கொண்டு கையொப்பம் இட்டுக் கொடுக்கக்கூடாதா?'' என்றார். அடிகள் நகைத்துக்கொண்டே,""நான் ஒரு பனியா! (வணிகன்) நீங்களும் ஒரு பனியாதான். வணிகத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்'' என்று கூறி கையெழுத்திட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.