இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கதை சொல்லும் நானம்மா!

லவ-குசர் என்ற இரட்டையர் ராமபிரானின் குழந்தைகளா, இல்லை வால்மீகியின் கற்பனைப் பாத்திரங்களா? பர்பாக் யார்? பீமனின் மகன் கடோத்கஜனின் மகன். அவனுக்கு மட்டும் மகாபாரதப் போர் முழுதையும் மலை உச்சியில் இருந்து

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:59 pm

சாருகேசி

லவ-குசர் என்ற இரட்டையர் ராமபிரானின் குழந்தைகளா, இல்லை வால்மீகியின் கற்பனைப் பாத்திரங்களா?

பர்பாக் யார்? பீமனின் மகன் கடோத்கஜனின் மகன். அவனுக்கு மட்டும் மகாபாரதப் போர் முழுதையும் மலை உச்சியில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது? அதன் பின்னணிக் கதை என்ன?

- என்று அத்தனை கதைகளையும் "நானம்மா' ஜெயா வேணுகோபால் சுவாரசியமாகச் சொல்வதைக் கேட்க வேண்டுமா? மிகவும் எளிது. நீங்கள் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து, www.nanamma.co என்று வலைத் தளத்தில் தட்டினால், விலை மதிப்பற்ற இந்திய பாரம்பரியக் கதைகளைப் படத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

"கதை சொல்லு பாட்டி, கதை சொல்லு..' என்று இரவில் பாடாய்ப் படுத்தும்

சின்னஞ்சிறு குழந்தைகளிடம், இனி சாக்குப் போக்குச் சொல்லாமல் சமாளிக்கலாம்.

மொத்தம் 1008 கதைகள். எல்லாமே ல்க்ச் வகை. அதில் 365 வீடியோ வடிவத்தில் பார்க்கலாம், கேட்கலாம். கேட்டுக்கொண்டே தூக்கம் வந்தால் தூங்கலாம் "என்ன கணக்கு 1008 கதைகள்?' என்று கேட்கிறவர்களுக்குக் கணக்குச் சொல்லியாக வேண்டும். இதோ கணக்கு. கூட்டல் போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்:

ஆன்மிகக் கதைகள்: 622

சரித்திர வகைக் கதைகள்: 210

கலாசார வகைக் கதைகள்:176

ஆன்மிகக் கதைகளில் புராண, இதிகாசங்கள் அடங்கும். விஷ்ணு, சிவன், பிரம்மா என்று கடவுள் பாத்திரங்கள் வருவார்கள். கிருஷ்ணரைப் பற்றிய கதைகள், ராமாயண, மகாபாரதப் பாத்திரங்களையும் பார்க்கலாம். படங்கள் உண்டு. பார்க்கவும் கேட்கவும் சுவாரசியமாக இருக்கும். சரித்திர வகைக் கதைகளில் சந்திரகுப்த மௌரியர், சாணக்கியர், பிந்துசாரர், அசோகர் என்று பல மன்னர்கள், சக்ரவர்த்திகள்.

கலாசார வகைக் கதைகளில், பண்டிகைகள், திருவிழாக்கள், சடங்குகள், பூஜைகள் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது. விரும்பியதை "க்ளிக்' செய்து பார்க்கலாம். நானம்மா சொல்லும் கதையைக் கேட்கலாம். எல்லாமே மூன்று முதல் பத்து நிமிடங்கள்தாம். பல ஒரு பக்கக் கதைகள். பர்பாக் கதை மட்டும்தான் பதிமூன்று நிமிடங்கள். கலாசார வகைக் கதைகளில், உட்கார்ந்த இடத்திலிருந்தே புனிதத் தலங்களைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம். புஷ்கர் எங்கே இருக்கிறது அங்கு என்ன விசேஷம்? ஏழு மோட்ச தலங்கள் என்னென்ன? எல்லாமே சொல்லுவார் நானம்மா.

இன்னொரு வலைத்தளத்தையும் உருவாக்கி, இலவசமாகத் தந்திருக்கிறார் ஜெயா வேணுகோபால். அதுதான் ஸ்ரீர்ழ்ல்ர்ழ்ஹற்ங்ள்ந்ண்ப்ப்ள்.ஸ்ரீர்ம் நிர்வாக இயலில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், சிக்கல்கள், படிப்படியாக உயர்வது எப்படி, போன்ற சுய முன்னேற்ற உத்திகள் இதில் உள்ளன. உங்கள் கணினியில் இவற்றை நீங்கள் எல்லோரும் பார்த்து பயனடைய வேண்டும் என்பதற்காகவே கல்வித்துறையிலும், நிர்வாக இயலிலும் டாக்டரேட் பட்டங்கள் பெற்ற ஜெயா வேணுகோபால் தருவதை இலவசமாக வலைத் தளத்தில் பதிவிறக்கிக்கொள்ளலாம். ஆனால், மறக்காமல் நானம்மாவுக்கு ஒரு நன்றி சொல்லுங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.