இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சைவத்துக்கு ஒரு திருவிழா!

பிப்ரவரி 17ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று "மூவர் தேவாரச் சொல்லகராதி' என்ற நூலையும், "தேவாரத் திருப்பதிகங்கள்' என்ற நூலையும் அருட்செல்வர் நா. மகாலிங்கம் ஒரு நிகழ்ச்சியில் வெளியிட்டபோது, அவற்றைப் பாராட்டி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:41 am

சாருகேசி

பிப்ரவரி 17ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று "மூவர் தேவாரச் சொல்லகராதி' என்ற நூலையும், "தேவாரத் திருப்பதிகங்கள்' என்ற நூலையும் அருட்செல்வர் நா. மகாலிங்கம் ஒரு நிகழ்ச்சியில் வெளியிட்டபோது, அவற்றைப் பாராட்டித் திறனாய்வு செய்த டாக்டர் செல்வக்கணபதியின் சொற்பொழிவைக் கேட்டபோது, அடடா, இத்தனை நாள் இந்த மனிதரின் சொற்பொழிவு எதையும் கேட்காமல் போய்விட்டோமே என்ற வருத்தம் உண்டாயிற்று.

தலைமை வகித்த அருட்செல்வர் நா. மகாலிங்கம் அறிமுக உரை ஆற்றியபோது, ஆகா, இந்த வயதிலும் இவர் எந்தச் சிறு விஷயத்தைக்கூட விட்டுவிடாமல் பேசுகிறாரே என்ற வியப்பு உண்டாயிற்று. பத்திகையாளர் ரா. கிருஷ்ணமூர்த்தி நூல்களைப் பெற்றுக்கொண்டு பேசியபோது, புதைந்து போய்க்கிடக்கும் நாணயங்களிலிருந்துகூட புதையல் மாதிரி செய்திகள் சொல்ல முடியுமா என்ற பிரமிப்பு உண்டாயிற்று.

நூல்களை வெளியிட்டு, திருவாவடுதுறை ஆதீன குரு மகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசரிய சுவாமிகள் ஆசி வழங்கிய போது, எத்தனை எளிய தமிழில் எத்தனை பெரிய கருத்துகளை இவரால் எடுத்துரைக்க முடிகிறது என்ற வியப்பு உண்டாயிற்று.

(மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வித்துவான் தியாகராச செட்டியார், தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் என்று அத்தனை தமிழ் அறிஞர்களையும் வளர்த்த பீடம் அல்லவா) சதர்ன் அல்லாய்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் தியாகராஜன் ஆற்றிய உரை நமக்கு வியப்பை அளித்தது. காரணம், இவர் என்ஜினீயராக ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரி. ஆனால் சைவத்தமிழில் சக்கைப்போடு போட்டார். அவரின் திறமையின் மீது நமக்கு மரியாதை உணர்வு உண்டாயிற்று.

ஏற்புரை ஆற்றிய நூலாசியர் புலவர் மணியன் எண்பதைத் தொட்டவர் என்றார்கள். ஆனால் அவரைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. உற்சாக ஊற்றாக இருந்தார். அவர் தாம் தொகுத்த அகராதி பற்றி சொன்ன ஒரு செய்தி புத்தம் புதிதாக இருந்தது. திருவண்ணாமலைக்கு அண்ணாமலை என்ற பெயர் எப்படி வந்தது? அங்கே "அண்ணா' என்ற (வட்டார) தலைவர் இருந்தாராம். அதனால் அந்த மலைக்கு "அண்ணாமலை' என்ற பெயர் வந்ததாம். தேவாரச் சொல்லகராதியை உருவாக்கிய செய்திகளை சுவாரசியமாகத் தன் உரையில் குறிப்பிட்டார் புலவர் மணியன்.

சென்னைப் பல்கலைக்கழக தத்துவத் துறையும், சைவ சித்தாந்தத் துறையும் இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ராமலிங்கர் பணிமன்றமும் நாரத கான சபாவும் இணைந்து நடத்தும் தேவார மூவர் இசைக்கலை விழா, நாரத கான சபா சிற்றரங்கில் காலையும் மாலையும் நடைபெற்றாலும், ரசிகர்களின் பங்கு வெகு வெகுக் குறைவு. சேலம் வேங்கடேசன், நெய்வேலி சந்தான கோபாலன் ஆகியோர் தமிழிசையில் ரசிகர்களைத் தோய வைத்தனர். சேலம் காயத்ரியின் நிகழ்ச்சியில், 63 நாயன்மார்களின் பெயர்களும் வரிசையாக வரும் ஊத்துக்காடு வேங்கட கவியின் பாடல் ஒன்றை அவர் பாடியபோது, அரங்கத்தில் அத்தனை பேரும் அதை ரசித்தார்கள். அவர்களின் பெயர்த் தொகுப்புகளுக்கு முன்னால் வந்த பொருத்தமான சிட்டசுவரங்கள் அந்தப் பாடலின் இசையமைப்பை "ஓகோ' என்று உயர்த்தின. (தமிழிசையை விரும்பும் ரசிகர்கள், இம்மாதிரி அரிய நிகழ்ச்சிகளைக் கேட்காமல் போய்விடுகிறார்களே!)

ஒரு மகிழ்ச்சியான செய்தி: டாக்டர் இரா. செல்வக்கணபதி அவர்களுக்கு மார்ச் 3ஆம் தேதி மாலை ஸ்ரீகிருஷ்ணகான சபாவில் பிரவசன சூடாமணி விருது வழங்கி கௌரவித்தார்கள். (இந்த சூடாமணி விருது பெற்ற மேலும் நால்வர்: ஸ்ரீவத்ச ஜெயராம சர்மா, அல்லூர் சேஷாத்ரி கனபாடிகள், விசாகா ஹரி, நாகை முகுந்தன் ஆகியோர்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.