இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ரவிசங்கர் முதல் ரவி வரை!

அகில இந்திய வானொலி தனது மல்ட்டி டிராக் ஸ்டுடியோவில் சென்ற வாரம் நடத்திய வாத்திய விருந்தாவை வாத்திய விருந்து என்றும் சொல்லலாம். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குள், கிட்டத்தட்ட இருபதுக்கு மேற்பட்ட வாத்தியக

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:24 pm

சாருகேசி

அகில இந்திய வானொலி தனது மல்ட்டி டிராக் ஸ்டுடியோவில் சென்ற வாரம் நடத்திய வாத்திய விருந்தாவை வாத்திய விருந்து என்றும் சொல்லலாம். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குள், கிட்டத்தட்ட இருபதுக்கு மேற்பட்ட வாத்தியக் கலைஞர்களை வைத்துக்கொண்டு, ஒய். சுப்பிரமணியம், (புல்லாங்குழல்) கே.வி. ராமானுஜம் (புல்லாங்குழல்) மற்றும் ரவி (வயலின்) ஆகிய மூன்று இசைக் கலைஞர்கள் மூன்று புதிய படைப்புகளைப் படைத்து ரசிகர்கள் முன்னிலையில் வழங்கினார்கள். முன்பு ரவிசங்கர், பன்னரிலால் கோஷ், காமா சாஸ்திரி, டி.கே. ஜெயராமன் முதலிய கலைஞர்கள் தில்லியிலும், பின்னர் சென்னை வானொலியில் ஈமனி சங்கரி சாஸ்திரி, (விசுவநாதன்) ராமமூர்த்தி, வி.வி. சுப்பிரமணியம் போன்றவர்கள் அதேபோன்ற வாத்திய விருந்தாவை இங்கேயும் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். நடுவே சில ஆண்டுகளாக நின்று போயிருந்த இந்த வாத்திய இசைக் கோலத்துக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கிறது. சுமார் இருபது கலைஞர்கள் பங்குகொள்ள, வெள்ளத்தின் போக்கை அதன் நடையழகுடன் வெளிப்படுத்தினார் இசையமைப்பாளர் ஒய். சுப்பிரமணியன். சின்னதாக அதில் லய வாத்தியங்களின் தனி ஆவர்த்தனமும் இருந்தது. அல்லம் துர்க்கா பிரசாதின் சித்திரவீணை ஒரு கட்டத்தில் துல்லியமாக ஒலித்தது. இருபது நிமிடங்களில் இசைக்கோலம் ஒன்றை இழை இழையாகத் தந்தது அனாயாசமான பணிதான்.

அடுத்த இருபது நிமிஷங்களுக்கு, ஒரு பெண்ணை உருவகப்படுத்தி, அவள் சிறு பிராயம் முதல் வளர்ச்சியைப் பின்னுவது போல், கல்யாணி ராகத்தில் இசைக்கோலம் வரைந்தார் கே.வி. ராமானுஜம். அதில் மெலிதாக கிராமத்து இசையும் ஒரு கட்டத்தில் இணைந்துகொள்ள, அந்த ராகத்தின் வேறொரு பரிமாணத்தையும் கேட்க முடிந்தது. வயலின் கலைஞர் வி.வி. ரவி எடுத்துக்கொண்டதோ "மனத்தின் எண்ண ஓட்டங்கள்'. "ராகப் பிரவாகம்' என்று அதற்கு ஒரு பெயரும் சூட்டியிருந்தார் ரவி. முழுக்க முழுக்க ராகமாலிகைத் தோரணம்தான். நாதஸ்வரமும் தவிலும் மல்லாரியைத் தொடங்கிவைக்க, தொடர்ந்து நளினகாந்தி, அபூர்வ ராகமான வர்ணரூபிணி, சந்திரஜ்யோதி, ரேவதி என்று பயணம் செய்தன அத்தனை வாத்தியக் கருவிகளும். எம். நர்மதாவின் ஒரு சிறிய வயலின் சோலோவும் தனித்துத் தெரிந்தது.

""ஒரு தனிப்பட்ட கலைஞனின் திறமைக்குச் சவால் விடும் இது போன்ற நிகழ்ச்சிகள்தாம் அவர்களுடைய கற்பனை வளத்தை வளர்க்கின்றன என்பதோடு, அவர்களுடைய திறமையை வெளிச்சத்துக்கும் கொண்டுவருகின்றன'' என்கிறார் ரவி.

பளிச் பளிச்சென்று மூன்று நிகழ்ச்சிகளையுமே அமைத்தது நறுக்கென்று இருந்தது. அதிலும், செல்லோ, கீ போர்டு என்று வாத்திய இசையை விரிவாக்கி, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அதை அளித்ததுதான் நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.