மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

இரண்டு கால் பசு

காந்திஜி ஒரு சமயம் மக்கன்லால் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது காந்திஜிக்கு தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்குப் பெண் கொடுக்க விரும்பினார் ஒருவர். முதலில் அந்தப் பெண்ணைத் திருமணம் ச

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:24 pm

காந்திஜி ஒரு சமயம் மக்கன்லால் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது காந்திஜிக்கு தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்குப் பெண் கொடுக்க விரும்பினார் ஒருவர். முதலில் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்ட இளைஞன், திடீர் என்று மறுத்துவிட்டான்.

விவகாரம் காந்தியிடம் வந்தது.

காந்தி அந்தப் பையனை அழைத்து விசாரித்தார். சரியாக மூன்று நாள்கள் காந்தி அப்பையனிடம் பல வகைகளில் பேசி, கடைசியில் திருமணத்திற்கு சம்மதம் பெற்றார். அப்பையன் வெளியே சென்றதும் காந்தியடிகள் பெண் வீட்டாரைப் பார்த்து,""இந்தப் பையனைத் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வைக்க மூன்று நாள்கள் ஆகிவிட்டன. நாளை இவன் உங்கள் பெண்ணோடு ஒழுங்காகக் குடித்தனம் நடத்தவில்லை என்றால் மீண்டும் ஒரு மூன்று நாளோ மூன்று மாதமோ அவனிடம் பேச வேண்டிய நிலை ஏற்படலாம். குழப்பம் மிகுந்த இப்பையனுக்கு உங்கள் பெண்ணைத் தர இனிமேலும் நீங்கள் விரும்புகிறீர்களா?'' என்று கேட்டார்.

பெண் வீட்டாரும் காந்தி சொல்வதும் நியாயம்தான், என்று வேறு மாப்பிள்ளை பார்ப்பதாகக் கூறிவிட்டனர்.

பெண் வீட்டார் வெளியில் போனதும்,""அப்பாடா! காலமெல்லாம் பசு பாதுகாப்புக்காகப் போராடும் நான் இன்று ஒரு பசுவைக் காப்பாற்றிவிட்டேன்''என்றார். விஷயம் புரியாமல் அனைவரும் விழித்தனர். ""பெற்றோர்களின் பிடிவாதத்தால் விரும்பாத பையனுக்குக் கழுத்தை நீட்ட இருந்த பெண்ணான இரண்டு கால் பசுவைத்தான் சொன்னேன்'' என்றார் காந்தி. உடனே அந்த இடத்தில் இருந்தவர்கள் "குபீர்' சிரிப்பு சிரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.