எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாறைகள்... பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக!

இந்தியாவில் ஹைதராபாத் நகருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. பாரம்பரிய கட்டிடங்கள், இடங்கள், கோயில்களுடன் இங்குதான் பாறைகளும் பாரம்பரிய நினைவுச் சின்னங்களாகப் பராமரிக்கப்படுகின்றன.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2013, 8:20 am

இந்தியாவில் ஹைதராபாத் நகருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. பாரம்பரிய கட்டிடங்கள், இடங்கள், கோயில்களுடன் இங்குதான் பாறைகளும் பாரம்பரிய நினைவுச் சின்னங்களாகப் பராமரிக்கப்படுகின்றன.
 ஜீவராசிகள் உருவாக முக்கிய காரணமே மலைகள்தான் என வல்லுநர்கள் கூறுவார்கள். தக்காண பீடபூமியில்தான் ஹைதராபாத் நகரம் அமைந்துள்ளது. இந்தப் பகுதி பூமி குளிர்ந்த போது, உள்ளேயிருந்து வெளிப்பட்ட குழம்புகள், காலத்தால் பாறைகளாக மாறின எனவும் அந்த வகையில் 2500 மில்லியன் ஆண்டு பழையவை இந்தப் பாறைகள் எனவும் கூறப்படு
 கிறது.
 மலைகளில் உள்ள பாறைகள் காலத்தால் பல மாற்றங்களுக்கு உள்ளான போது, சில இடங்களில் அவை இயற்கையான கண்கவர் காட்சிகளையும் உருவாக்கியது. சில இடங்களில் இந்தப் பாறைகளின் அடுக்குகள், அமைப்புகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இப்படி நகரைச் சுற்றி 25 கலையம்சம் கொண்ட பாறைகள் வடிவம் கண்டுபிடிக்கப்பட்டு, அவை இயற்கையாக அப்படியே தொடர சொசைட்டி ஆஃப் சேவ் ராக்ஸ் (நஞஇஐஉபவ ஞஊ நஅயஉ தஞஇஓந) என்ற அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் பலதரப்பட்ட துறையைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுடைய கொள்கை} இயற்கையை மாற்றாமல் அதனுடன் சேர்ந்து வாழக் கற்றுக் கொள்வோம் என்பதுதான்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.