பத்தாயிரம் மகளிருக்கு வணிக-நிர்வாக இயல் பயிற்சி!
உலகம் முழுவதுமிருந்து ஏற்கெனவே வணிகத் துறையில் ஈடுபட்டிருக்கும் பத்தாயிரம் பெண்களைத் தேர்ந்தெடுத்து,


உலகம் முழுவதுமிருந்து ஏற்கெனவே வணிகத் துறையில் ஈடுபட்டிருக்கும் பத்தாயிரம் பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் தாங்கள் செய்துவரும் தொழிலில் மேலும் சிறப்பான முன்னேற்றம் அடைய, ஹைதராபாதிலுள்ள புகழ் பெற்ற உயர் கல்வி நிறுவனமான இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் 2008ஆம் ஆண்டு ஒரு திட்டத்தை அறிவித்தது. இதற்கு உறுதுணையாக இருக்க, உலகப் புகழ் பெற்ற வணிக நிறுவனமான "கோல்ட்மேன் சாக்ஸ்' தன் ஆதரவுக் கரத்தை நீட்டியது. ஐந்து வருடங்களில் பத்தாயிரம் பெண்களுக்கு அவரவர் செய்யும் தொழிலில் மேன்மை காண இந்த அபூர்வமான திட்டம் வகுக்கப்பட்டது. இதுவரை 8500 பேர் இதனால் பயனடைந்துள்ளனர். இதுதான் இறுதி ஆண்டு.
திருத்தணியில் உள்ள ஒரு பெண்மணி பதினைந்து வெட்-கிரைன்டர் (மாவு அரைக்கும் இயந்திரங்கள்) வைத்து, தொழில் நடத்தி வருகிறார். இந்தப் பெண்மணியின் வெற்றிக் கதை சுவாரசியமானது என்று தெரிந்துகொண்டேன்.
இதில் பங்கு கொண்ட பத்தாயிரம் பெண்களில் ஒருவர், உமா யோகேஷ். இவர் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட். வேலைக்குப் போகும் மகளிருக்கு உதவுவதற்காக மாலை 4 முதல் 7 மணி வரை அவர்களுக்கு வகுப்புகள் நடத்துகிறார். அவரிடம் உரையாடியபோது கிடைத்த தகவல்கள் இதோ:
""இதை நடத்துபவர்களே முழுவதுமாக நிதிவசதி செய்யும் திட்டம். நாம் எதுவும் கொடுக்க வேண்டாம். உலகம் முழுதுமிருந்து சொந்தமாகத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் மேம்பாட்டுக்கானதால், ஏராளமான பேர் விண்ணப்பிப்பார்கள். அவர்களைத் தேர்ந்தெடுப்பது சாதாரண பணி அல்ல. இந்தியாவில் உள்ள தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு நகரங்களில் மட்டுமே இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. முதலில் ஏப்ரல் 2013-இல் ஹிந்துவில் அறிவிப்பு வெளிவந்தது. என்னுடைய பாட்ச்சில், சென்னையில் 33 பேர் இருந்தார்கள். மொத்தம் 16 வாரங்கள் இந்தப் பயிற்சி தரப்படும். முதல் ஒரு வாரம் வகுப்பறையில் விளக்குவார்கள். எந்த அளவுக்கு வேலை வாய்ப்புகளை உண்டாக்குகிறோம் என்பதும் முக்கியம். எனக்குத் தெரிந்த பெற்றோர்தான் எனக்கு இதைப் பற்றி அறிமுகப்படுத்தினார்கள். நான் முதல் வார அறிமுக வகுப்பில் சேர்ந்தேன். விண்ணப்பத்திலேயே ஈடுபட்டிருக்கிற தொழில் விவரங்கள் எல்லாவற்றையும் கொடுத்துவிட வேண்டும். அப்புறம் நேர்காணல் நடக்கும். நாம் ஈடுபட்டிருக்கும் தொழில் பற்றிக் கேள்விகள் கேட்பார்கள். நான் போனபோது மொத்தம் 75 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். அதில் 37 பேரைத்தான் தேர்ந்தெடுத்தார்கள்.
பல் வைத்தியர்கள், பியூட்டி பார்லர் நடத்துபவர்கள், புத்தக வெளியீட்டாளர்கள், டிராவல் எஜென்டுகள், நர்சரிக்கு முற்பட்ட விளையாட்டுப் பள்ளி நடத்துபவர்கள், ஐடி துறையில் இருப்பவர்கள், சிற்றுண்டி விடுதி நடத்துபவர்கள் என்று பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்ட மகளிர் இதற்கு வந்திருந்தார்கள்.
திட்டமிடுதல், வாய்ப்புக்களைக் கண்டறிதல், சந்தையைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல், வாடிக்கையாளருடனான உறவு, இவற்றை எல்லாம் கற்றுத் தருகிறார்கள். நான்கு வாரங்களுக்கு, "மென்ட்டார்' எனப்படும் நெறிப்படுத்துபவர் உங்களுக்கு வழிகாட்டியாக இருப்பார். ஒரு வார வகுப்பு ஹைதராபாதில் நடக்கும். முதலில் நாம் ஒரு பிசினஸ் பிளான் பேப்பர் தயாரித்து அளிக்க வேண்டும். அதை ஒரு குழு பரிசீலித்துத் தேர்ந்தெடுக்கும். முதல் இரண்டு வகுப்புகள் சென்னையில் நடக்கும்.
"மென்டார்' எனப்படும் வழிகாட்டி, நம்முடைய பிசினஸ் பிளானை அலசி ஆராய்ந்து, எத்தனை செலவு ஆகும் என்பதைக் கணிப்பார். மார்க்கெட்டுக்குள் ஆழமாக நுழைய, தயாரிப்புக்கு உரிய விலையை நிர்ணயித்துக் கொடுப்பார்கள். நான் என்னுடைய "மென்டார்' வருகைக்காகக் காத்திருக்கிறேன். என்னுடைய முதல் வகுப்பே தலை சுற்றுகிற மாதிரி இருந்தது. அசலான வியாபாரம் பற்றிய உண்மைகள், பிரச்னைகளுக்கான தீர்வுகள், வணிகம் தொடர்பான சட்டங்கள், எப்படி நம் தொழிலை ஆராய்வது என்று அலசி எடுத்துவிட்டார்கள். நாம் தினசரி நம் தொழிலைப் பார்க்கும் பார்வை வேறு. இவர்களின் பார்வை முற்றிலும் வேறு. ஏனென்றால் அவர்கள் புரொபஷனல்கள் எனப்படுபவர்கள். தொழில் துறையிலிருந்து வந்த அனுபவஸ்தர்கள்.
இந்த ஐடியாவைக் கொடுத்தவர்கள் "கோல்ட்மேன் சாக்' நிறுவனத்தினர். எப்படி வியாபாரத்தைப் பெருக்குவது என்பது மட்டுமல்ல, எவ்வாறு சமுதாயத்துக்கு உங்கள் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வது என்றும் நமக்கு உறைக்கிற மாதிரி சொல்லித் தருகிறார்கள். இதில் பங்குகொள்கிறவர்கள் பயன்பெறாமல் இருக்க முடியாது. ஏனென்றால் "மென்டார்' என்பவர் ஒவ்வொரு தொழிலுக்கும், அதைச் செய்யும் பெண்மணிக்கும் ஏற்ற வகையில் நம்மை வழி நடத்திச் செல்வார். அதனால் எந்தப் பின்னணியிலிருந்து வந்தவராக இருந்தாலும், நிச்சயம் வெற்றி காண முடியும்.
என்னைப் பொறுத்துவரை, நான் ஒரு சார்ட்டர்டு அக்கவுன்டென்ட் என்பதால், சில வழிமுறைகள், தரம் முதலியவற்றை செயல்படுத்த
உதவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...