நியூயார்க்கிலிருந்து சென்னைக்கு...!
வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிகல் இஞ்சினீயரிங் படித்து, பேராசிரியர் ஒருவர் ஆலோசனையின் பேரில் கம்ப்யூட்டர் சயன்ஸும் கற்று, எம்.பி.ஏ.வை சற்று ருசி பார்த்துவிட்டு,


வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிகல் இஞ்சினீயரிங் படித்து, பேராசிரியர் ஒருவர் ஆலோசனையின் பேரில் கம்ப்யூட்டர் சயன்ஸும் கற்று, எம்.பி.ஏ.வை சற்று ருசி பார்த்துவிட்டு, வால் ஸ்ட்ரீட்டுக்கு வந்தவர் சோன்யா மாயா பென்கோவிச். அப்பா ஸ்டேட் காங்கிரஸ்மேனாக ஐந்து ஆண்டுகள் இருந்திருக்கிறார். அரசியல்வாதி. அதனால் அரசியல்வாதிகளிடம் பழகிய அனுபவமும் கொஞ்சம் உண்டு என்கிறார் மாயா ஒரு சின்னப் புன்னகையுடன். வாஷிங்டனில் குடியரசுத் தலைவரின் வெள்ளை மாளிகையில் ரொனால்ட் ரீகனைச் சந்தித்ததும் உண்டாம்.
ஆனால் மாயாவுக்குள் ஒளிந்திருந்த பங்கு மார்க்கெட் சந்தைத் திறமை, அவரை பாண்ட் டிரேடிங் துறையில் நிகரில்லாதவராக உயர வைத்தது. அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய நிறுவனம் ஆங்ஹழ் நற்ங்ஹழ்ய்ள். அந்த நிறுவனத்தில் முக்கியமான முடிவுகள் எடுப்பது குறித்த அலசல் என்றால் அதை மாயாவிடம்தான் கொடுத்தார்கள். நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் தொடங்கி நாட்டின் சுமார் 40க்கும் மேற்பட்ட பங்குத் தரகர்களை ஒற்றை மனுஷியாகக் கையாளத் தொடங்கினார் மாயா. அதுவரை கையாளப்படாத முறையை முதன்முதலாக அவர் அறிமுகப்படுத்தினார். அப்போது அவருக்கு வயது என்ன தெரியுமா? இருபத்தைந்துதான். அப்புறம் தன்னுடைய சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார் மாயா. பங்குகளுடனும், பாண்டுகளுடனும் புழங்கினார். அப்போதெல்லாம் ஈ-ட்ரேடிங், இன்டர்நெட் எல்லாம் கிடையாது.
எல்லா ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகளுடனும் தொடர்பு வைத்திருக்க வேண்டும். நான் அதற்கான சிஸ்டத்தை உருவாக்கினேன். பத்து வருஷங்களில் ஏராளமாகச் சம்பாதித்தேன். "லாட்ஸ் ஆப் மனி' என்று கைகளை விரித்துச் சிக்கிறார் மாயா. இந்தப் பதவி, பணம் எல்லாவற்றையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, இவர் இந்தியாவுக்கு வரக் காரணமாயிருந்தது ஒரு சந்திப்பு.
அமெரிக்க டைம் பத்திகையில் "யூ ட்யூப்' குரு என்று வர்ணிக்கப்பட்ட இந்தியரான டாக்டர் பாஸ்கரன் பிள்ளையைச் சந்தித்தார் மாயா. பிட்ஸ்பர்கில் பி.எச்.டி. செய்த ஆன்மிக விஞ்ஞானி.
""மேற்கத்திய வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அதை ஆன்மிகத்துடன் இணைத்துச் செயல்பட வேண்டும்'' என்றார். அவ்வளவுதான், ஜனவரி 2000இல், இந்தியாவுக்கு வந்துவிட்டார் மாயா பெங்கோவிச்.
சில பரிகாரங்களைச் செய்ய வேண்டி காரைக்கால், திங்களூர், திருவெண்காடு எல்லாம் போய் வந்தார். பெற்றோர் இதற்கெல்லாம் ஆதரவு தெரிவித்தார்களாம். அதற்குப் பிறகு 2001இல் வால் ஸ்ட்ரீட் தொழிலை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு டாக்டர் பாஸ்கரன் பிள்ளையின் நிறுவனத்தின் எம்.டி.யாகச் சேர்ந்தார் மாயா. யக்னங்கள், யாகங்கள் பற்றி எல்லாம் விலாவாரியாகத் தெரிந்துகொண்டார்.
""குறிப்பிட்ட நேரத்தில், முறையாக, சிரத்தையுடன் செய்தால் நிச்சயம் பலன் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ உங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில், ஏனோ தானோ என்று அக்கறையில்லாமல் செய்யும் யாகத்துக்கு ஒரு பலனும் கிடைக்காது.
காரியம் பலிக்க வேண்டும் என்றால் எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அப்படிச் செய்ய வேண்டும். முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும்.
நான் வேண்டுவதை எப்படி அடைவது? என்று கேட்டால் நான் இதைத்தான் பதிலாகச் சொல்வேன். டிவைன் இன்டர்வென்ஷன் எனப்படும் தெய்வீகத் தொடர்பு உண்டாக வேண்டும். டிரெடிஷனும் டெக்னாலஜியும் கைகோர்க்க வேண்டும். அந்த அதிர்வலைகள் சுற்றுச்சூழலில் இணைந்தால், அவை சக்தி பெற்று செயல்படத் தொடங்கும்.
எனக்குத் தெரிந்து வேறு எந்த நிறுவனமும் இவ்வளவு விஞ்ஞானரீதியாக இயங்குவதாகத் தெரியவில்லை'' என்கிறார் உறுதியாக.
இதுவரை 500க்கும் மேற்பட்ட கோயில்களுக்குப் போயிருக்கிறார் மாயா. சில கோயில்களுக்குத் திரும்பத் திரும்பப் போயிருக்கிறார்.
""அவை வெறும் கட்டடங்கள் அல்ல. அங்கே எனர்ஜி - சக்தி இருந்திருக்கிறது. அதனால்தான் அங்கே கோயிலை எழுப்பி இருக்கிறார்கள். ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கோயில் எழுப்புவதற்கு முன்பே அங்கே அந்த எனர்ஜி இருந்திருக்கிறது. நீங்கள் சரியான கோயிலுக்குப் போனால், சரியான சக்தி உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய மன நிலைக்குத் தகுந்த மாதிரி அது வேகம் பெறும்'' என்கிறார்.
""உங்களைக் கவர்ந்த கோயில் எது?'' என்று கேட்டபோது,""பட்டீசுவரம்'' என்று பட்டென்று பதில் அளித்தார் மாயா. அங்கே ஞானசம்பந்தர் போயிருக்கிறார்.
தரிசித்திருக்கிறார். அவர் அங்கே வந்தபோது, நந்தி திரும்பிப் பார்த்ததாம். கோயம்பேடு அருகே உள்ள சிவன் கோயில் மிகச் சக்திவாய்ந்தது என்கிறார். அதிலும் பிரதோஷ தினத்தன்று அங்கே போய் வழிபட வேண்டும் என்கிறார். அதன் பின்னணியில் உள்ள புராணக் கதையையும் அறிந்து வைத்திருக்கிறார். பல பிரதோஷங்களுக்கு அங்கே போயிருக்கிறாராம்.
சிதம்பரம் நடராஜர் கோயிலும் இவர் பட்டியலில் விசேஷ இடம் பிடித்தது. ""அங்கே கிடைக்கிற எனர்ஜியை அங்கே போனால்தான் உணர முடியும்'' என்கிறார். காஞ்சீபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கு சமீபத்தில் போய்வந்தாராம். சென்னையில் கபாலி கோயில், பெசன்ட் நகர் ஆறுபடை வீடு எல்லாம் இவர் போய் வந்த சில கோயில்கள்.
""முந்தைய பிறவி பற்றி நாடியில் தெரியவந்த போது நம்பியதாகச் சொன்னீர்கள். அப்படியானால் மறுபிறவியில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?'' என்ற கேள்விக்கு, ""உண்டு. ஆராய்ந்து பார்த்தால் எல்லாம் நார்மலாகத்தான் தெரியும். அசாதாரணமாகவே தெரியாது'' என்கிறார்.
""வாழ்க்கையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. லாஜிக்கலாக எண்ணி, சிறந்ததை நோக்கிக் குறிவைத்தால் பலன் பிரமாதமாக இருக்கும்.
இன்க்டிபிள் என்று நீங்களே சொல்வீர்கள். ஒவ்வொருவரும் ஸ்பெஷல்தான். அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவகை சக்தி இருக்கிறது. அது தெய்வீகத்துடன் இணைந்து இயங்கும்போதுதான் - டிவைன் ப்ளென்ட் ஆகும்போதுதான் - அந்த முழு சக்தியின் வீச்சும் உங்களுக்குத் தெரியும்''
டாக்டர் கௌதம் அவர்களிடம் அறிமுகம் செய்துவைத்தார் மாயா. டாக்டர் கௌதம் ஆஸ்திரேலியாவில் தாம் வகித்த பதவியைத் துறந்துவிட்டு சென்னை வந்தவர்.
அவர் சொன்ன ஆச்சரியத் தகவல், அமெரிக்காவில் ஐம்பத்தாறு பல்கலைக்கழகங்களில் ஆயுர்வேத-சித்தா மருத்துவ முறைகளில் ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவாம். மருத்துவக்கல்வி கற்று, அங்கே இரண்டு ஆண்டுகள் மேற்கொண்டு படித்துவிட்டு, இந்த இந்திய மருத்துவ ஆய்வுகளில் இறங்க, ஏராளமான நிதி வசதியை ஒதுக்குகின்றன இந்தப் பல்கலைக்கழகங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...