வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அண்ணனுக்கு பி எச்.டி. அன்றைக்கே தங்கைக்கும் பி எச்.டி!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர், ஒரே நாளில் ஒரே பல்கலைக்கழகத்தின் டாக்டரேட் பட்டம் பெற்றதாக நாம் கேள்விப்பட்டதில்லை. (இருந்தால் தெரியப்படுத்துங்கள்!)

News image
Updated On :8 செப்டம்பர் 2013, 8:59 am

சாருகேசி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர், ஒரே நாளில் ஒரே பல்கலைக்கழகத்தின் டாக்டரேட் பட்டம் பெற்றதாக நாம் கேள்விப்பட்டதில்லை. (இருந்தால் தெரியப்படுத்துங்கள்!)
 அண்ணா வி.ஆர். அனில்குமார், எலக்ட்ரானிக் என்ஜினீயரிங்கில் பி.இ. பட்டம் பெற்று, சென்னை பெருங்குடியில் சிறு தொழில் அதிபராக இருந்தவர். அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் மகன் குரு தேஜஸ், அமெரிக்கப் பெண்ணான சாரா போரனைக் காதலித்து வந்தார்.
 திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து தந்தையிடம் தெரிவித்த போது, அனில்குமார் என்னவோ சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆனால் நம்முடைய இந்தியத் திருமண சடங்குகள் பற்றி அமெரிக்க சம்பந்திகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டி வந்தது.
 நம்முடைய வைதீக திருமணச் சடங்குகளில் பெரும்பாலும் சமஸ்கிருத மொழியிலேயே மந்திரங்கள் உச்சரிக்கப்படுவதால், அவற்றைப் பற்றி அறிந்துகொள்ள, இரண்டு வருட சமஸ்கிருத எம்.ஏ. படிப்புக்குப் பதிவு செய்துகொண்டார்.
 எந்த மாநில திருமண முறையை எடுத்தாலும், அங்கே பின்பற்றப்படும் கிருஹ்ய சூத்திரங்கள் எல்லாம் சமஸ்கிருதத்தில்தான் இருந்தன. பஞ்சாபி, வங்காளி, தெலுங்கு, கன்னட, மலையாள, தமிழ் சடங்குகளை எல்லாம் டாகுமென்டரி மாதிரி படம் பிடித்து, தன் பி.எச்.டி. படிப்பின் "தீஸிûஸ'த் தயாரித்தார். (குடகு நாட்டில், திருமணத்தின்போது, ஒன்பது வாழை மரங்களை வெட்டிவிட்டுத்தான் தாலி கட்ட வேண்டுமாம்!) அனில் குமார் ஏற்கெனவே சமஸ்கிருதத்தில் ஆர்வம் கொண்டிருந்ததால், பிஸினûஸ ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, தீவிரமாகத் தன் முனைவர் பட்டத்துக்கு முனைந்தார். (வாய்மொழித் தேர்வு பேட்டி நடந்த போது பேராசியர்களும், பார்வையாளர்களும் கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டபோது, புன்சிரிப்புடன் அவற்றுக்கெல்லாம் அசராமல் பதில் அளித்ததை இரண்டு ஆண்டுகளுக்கு முன் பார்க்க நேர்ந்தது!)
 வி.ஆர். தேவிகா, அனில்குமாருடைய சகோதரி. கல்வித்துறையில் ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டே இருந்தவர், காந்தியச் சிந்தனைகளின் தாக்கம் எத்தகையது, அவருடைய கல்விக்கொள்கைகள் மாணவப் பருவத்தில் பயன்படுமா? என்று யோசிக்கத் தொடங்கினார். (கிராமியக் கலைகளை வந்தவாசி, திண்டுக்கல் என்று ஊர் ஊராகப் போய் அறிந்து வந்து, அந்தக் கலைஞர்களை இங்கே அழைத்து வந்து அவர்களின் கலைத் திறமையை அறிமுகப்படுத்தியவர் தேவிகா.)
 பி.ஏ. சைக்காலஜி பெற்று முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, காந்தியச் சிந்தனையில் எம்.ஏ. பட்டம் பெற்றார் தேவிகா.
 ""டாக்டரேட் முடித்தே தீருவது என்று பிடிவாதமாக இருந்தேன். பின்னர் கல்லூரி மாணவ மாணவியருக்கு காந்திஜியின் கருத்துக்களை எடுத்துச் சென்று விளக்கும் பயிற்சிப் பட்டறைகளின்போது, என்னை எல்லாக் கல்லூரிகளிலும் "டாக்டர்', "டாக்டர்' என்று குறிப்பிட ஆரம்பித்தார்கள்.
 அதை உண்மையாக்குவது என்று தீர்மானித்தேன். 2006-இல் தத்துவத் துறையில் பிஎச்.டி.க்குப் பதிவு செய்துகொண்டேன். காந்தியின் மக்கள் தொடர்பு முறைகளில் எல்லாம் எனக்கென்னவோ ஒருவித நாடகத்தன்மை இணைந்திருந்த மாதிரி பட்டது.
 அதனால் அவருடைய உடல்மொழி, உரைகள் வழங்கும் முறை, உடையின் பாங்கு எல்லாவற்றையும் என் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினேன். இதை நாட்டிய சாஸ்திரத்தில் ஆங்கிகா, வாசிகா, ஆஹார்யா, சாத்விகா என்று சொல்வார்கள்.
 நானும் என்னுடைய அண்ணன் இரண்டு பேருமே 2011}இல் அவரவர் ஆய்வை முடித்தோம். கடந்த ஆண்டு வாய்மொழித் தேர்வில் கலந்துகொண்டோம். இந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதா பங்குகொண்ட பட்டமளிப்பு விழாவில் பட்டமும் பெற்றுவிட்டோம்...'' என்று மகிழ்ச்சியில் புன்னகைத்தார் தேவிகா.
 அம்மாவும் மகளும், ஏன் - தந்தையும் மகனும்கூட ஒரே நாளில் பட்டம் பெற்ற நிகழ்ச்சிகள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அண்ணன்-தங்கை ஒரே நாளில் பி.எச்.டி. பட்டம் பெற்றது இதுவே தமிழ் நாட்டில் முதலாவதாக இருக்கும் என்று தோன்றுகிறது.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.