பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தெலுங்கில் தீபிகா படுகோனே

"பாகுபலி' திரைப்படங்கள் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தைத்  தொடர்ந்து "சாஹோ'வில் நடித்தார்.

Published On :

"பாகுபலி' திரைப்படங்கள் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தைத்  தொடர்ந்து "சாஹோ'வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான "சாஹோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது பிரபாஸ், "சாஹோ' படத்தைத் தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் "ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வருகிறார். இதன் இயக்குநர் கே.கே.  ராதா கிருஷ்ணா. 

இதைத் தொடர்ந்து வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் பிரபாஸ் நடிக்க உள்ளார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற "மகாநடி' என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இப்படத்தை இயக்க உள்ளார். 

இந்நிலையில், இப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாகப் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தீபிகா படுகோனே இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும்  அதிகரித்துள்ளது. தெலுங்கில் தீபிகா படுகோனே நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.