தென்னாப்பிரிக்காவில் உள்ள குகையில் நடந்த புதை வடிவ ஆய்வில் "லிட்டில் ஃபுட்' என்ற எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இது மனித குடும்பத்தைச் சேர்ந்த 3.67 மில்லியன் ஆண்டுகள் பழமையான பெண்ணின் எலும்புக்கூடு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த எலும்புக்கூடு மனித பரிணாமம் குறித்த ரகசியங்களை அறிய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது.
3.67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனைப் போன்ற நிமிர்ந்து நடக்கும் அடையாளங்களைக் கொண்ட இந்த எலும்புக்கூடு நமக்கு முழுமையாகக் கிடைத்துள்ளது. அந்தப் பெண் ஒரு தனித்துவமான இனத்தைச் சேர்ந்தவள். தற்போதைய மனிதர்களின் முன்னோர்களாக கருதப்படும் ஹோமோ செபியன்களுக்கு முந்தைய இனத்தைச் சேர்ந்தவர். அவர் "ஆஸ்ட்ராலோபிதேகஸ்' என்ற ஒரு வகை. குரங்கு போன்ற "ஹோமினிட்' இனத்தைச் சேர்ந்தவர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த "ஹோமினிட் ஆஸ்ட்ராலோபிதேகஸ் ஆப்பிரிக்கானஸ்' என்று அழைக்கப்படுகிறது.
நவீன மனிதர்களின் அட்லெஸ் முதுகெலும்பு தலைக்கும் கழுத்துக்கும் இடையேயான தொடர்பாக உள்ளது. இது தமனிகள் வழியாக மூளைக்கு ரத்தம் வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. லிட்டில்ஃபுட் இன் அட்லஸ் முதுகெலும்பை ஆய்வு செய்த போது தற்கால மனிதர்களிலிருந்து ஆதிமனிதன் எவ்வாறு வித்தியாசமாக இருந்தான் என அறிய முடிகிறது.
அதன்படி லிட்டில்ஃபுட் இன் அட்லஸ் முதுகெலும்பு வழியாக மூளைக்குச் சென்ற ரத்த ஓட்டம் நவீன மனிதர்களை விட மூன்று மடங்கு குறைவாக இருந்து உள்ளது. இது போல் லிட்டல்ஃபுட் மண்டை ஒட்டை ஆய்வு செய்த போது அந்தக் கால மனிதர்களுக்குச் சிறிய மூளை இருந்ததும் குரங்குகள் போன்ற மரங்களுக்கு இடையில் தாவுவது மற்றும் சைவ உணவுகளைச் சாப்பிட்டதும் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ராதாகிருஷ்ணன், தீரஜ்குமார் உள்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!
சில பயணங்கள் அசாதாரணமானவை! - முதல்வர் விஜய்யுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு!

காஸாவின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்! 6 காவல் அதிகாரிகள் உள்பட 12 பேர் பலி!







