ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

படப்பிடிப்புக்கு அஜித் தடை

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் "வலிமை' படத்தின் படப்பிடிப்பு கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

News image
Updated On :24 மே 2020, 12:02 pm

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் "வலிமை' படத்தின் படப்பிடிப்பு கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறைக்குப் பிந்தைய பணிகளுக்கு அரசு தரப்பில் அனுமதி கொடுக்கப்பட்டு டப்பிங், எடிட்டிங் ,கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் தொடங்கி இருக்கக்கூடிய சூழ்நிலையில் விரைவில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "வலிமை' படத்தின் படப்பிடிப்பு இன்னும் 72 நாட்கள் மீதமிருக்கும் சூழ்நிலையில் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்த உடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டால் தான் திட்டமிட்டபடி தீபாவளிஅல்லது 2021 பொங்கல் அன்று திரைக்கு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி இருக்கக் கூடிய சூழ்நிலையில் படக்குழு படப்பிடிப்பு தொடங்க அனுமதி எப்போது கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நடிகர் அஜித் தரப்பிலோ படப்பிடிப்பை பொறுமையாகத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளி வந்திருக்கிறது. குறிப்பாக சென்னையில் கரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதால் "வலிமை' படத்தின் படப்பிடிப்பை பொறுமையாகவே தொடங்கிக் கொள்ளலாம் என்று அஜித் கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.