மனித நேயம்
சத்யா ஸ்டுடியோவில் படப்பிடிப்பின் போது, விலை உயர்ந்த எளிதில் கிடைக்காத காமிரா ஒன்றை தொழிலாளி ஒருவர் கீழே போட்டு விட்டார்.


சத்யா ஸ்டுடியோவில் படப்பிடிப்பின் போது, விலை உயர்ந்த எளிதில் கிடைக்காத காமிரா ஒன்றை தொழிலாளி ஒருவர் கீழே போட்டு விட்டார். அது பழுதாகிவிட்டது. அங்கிருந்தவர்கள் எம்.ஜி.ஆர் என்ன சொல்லப் போகிறாரோ என்று தயங்கித்தயங்கி ஒப்பனை அறையில் இருந்தவரிடம் விவரத்தை சொன்னார்கள். அவர் காமிரா பழுதானதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
அந்தத் தொழிலாளியை அழைத்து "உனக்கு அடியெதும் படவில்லையே? பயப்படாதே காமிராவின் பழுதை சரி செய்துவிடலாம்' என்று சொன்னதோடு ஸ்டுடியோ பொறுப்பாளரிடம் வயதான "அந்தத் தொழிலாளியை இனிமேல் கனமான காமிராவை தூக்க சொல்ல வேண்டாம்' என்றார்.
1977-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக இருந்த போது செய்தித்துறையின் சார்பில் நலிந்த கலைஞர்களுக்கு கலைவாணர் அரங்கில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருவருக்கு பொற்கிழியை வழங்கிய எம்.ஜி.ஆர் அவரின் காலில் விழுந்து வணங்கினார். அங்கே இருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். "நான் உணவுக்கு கஷ்டப்பட்ட போது அவர் எனக்கு உணவளித்தார்' என்று கூறி நன்றி உணர்வை எம்.ஜி.ஆர் வெளிப்படுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...