மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தென்னிந்திய இசையில் ஆர்வம் 

லண்டனைச் சேர்ந்த இசைக் கலைஞர் பிஸ்வஜித் நந்தா. லண்டனில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகத்தில் ஐ.டி துறையில் பணி புரிந்து வருகிறார்.

News image
Updated On :4 அக்டோபர் 2020, 1:52 pm

DIN


லண்டனைச் சேர்ந்த இசைக் கலைஞர் பிஸ்வஜித் நந்தா. லண்டனில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகத்தில் ஐ.டி துறையில் பணிபுரிந்து வருகிறார்.  இசை மீது தீராத ஆர்வம் கொண்ட இவரை, கடந்த சில வருடங்களுக்கு முன்பு அனிருத்தின்  "டேவிட்' படத்தில் இடம்பெற்ற "கனவே கனவே....' என்கிற பாடல் மிகவும் ஈர்த்து விட்டது. இந்த நூற்றாண்டின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று என சிலாகிக்கும் பிஸ்வஜித்,  இந்தப் பாடலின் இசைக் குறிப்புக்கு தனது பாணியில் புது வடிவம் கொடுத்திருக்கிறார்.   இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம் உடன் சேர்ந்து இந்தப் பாடலுக்குப் புது வடிவம் கொடுத்துள்ளார். 

இதுகுறித்து பிஸ்வஜித் கூறும்போது, “""எனக்கு தமிழ் தெரியாவிட்டாலும் நான் தமிழ் இசையை வெகுவாக ரசிப்பவன். தமிழகம் எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் அனிருத் என மிகத் திறமையான இசைக்கலைஞர்களை கொண்டது.  "கனவே கனவே...' பாடலுக்கு கவர் டிராக் உருவாக்கியதில் ரொம்பவே மகிழ்ச்சி. நிச்சயமாக அனைவரையும் இது கவரும். நிறைய தென்னிந்திய பாடல்களை உருவாக்குவதிலும் எனக்கு ஆர்வம் அதிகம். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், ஜிப்ரான், தேவிஸ்ரீபிரசாத், டி.இமான் ஆகியோருடன் இணைந்து பணியாற்றவும் விரும்புகிறேன்''” என்று தெரிவித்துள்ளார். மேலும் இசைக்காகவே தனியாக "சிங்கர் பிஸ்வஜித் நந்தா' என்கிற யூடியூப் சேனலை உருவாக்கியுள்ள இவர், இந்த “"கனவே கனவே...'” 

பாடலின் கவர் ட்ராக்கை அதில் பதிவேற்றியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.