சுரங்கப்பாதையில் சாதனை!
உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையான "லே மணாலி ரோஹ்தாங் அடல் டன்னலை' பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.


உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையான "லே மணாலி ரோஹ்தாங் அடல் டன்னலை' பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். இது இந்தியாவின் சாதனை மட்டுமல்லஎதிரி நாடுகளுக்கு விடுத்த சவாலாகும் இதன் மூலம் சீனாவின் ராஜதந்திரங்களுக்கு எதிராகத் தனது நிலத்தடி ஆயுதத்தைத் தயார் செய்துள்ளது இந்தியா .அனைத்து தட்ப வெப்ப நிலையிலும் இந்திய ராணுவத்திற்கு சேவை செய்யும் சுரங்கம் இதுபனிப்பொழிவு அல்லது கடும் மழையாக இருந்தாலும், ராணுவ உபகரணங்கள் மற்றும் ரேஷனை "அடல் டன்னல்" வழியாக வழங்குவது மிகவும் எளிதுஇந்தியாவின் இந்த நிலத்தடி ஆயுதத்தால் சீனா, பாகிஸ்தான் நாடுகள் இனி இந்தியாவுடன் மோதுவது குறித்து சற்றே யோசிக்கும்.
கடந்த 2000 -ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி ரோதங் சுரங்கப் பாதையை அமைப்பதற்கு முடிவு செய்தார் அப்போதைய பிரதமர் வாஜ்பாய்2002-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டினார்தற்போது, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இது பயன்பாட்டுக்கு வந்துள்ளதுகடந்தாண்டு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இந்தச் சுரங்கப் பாதைக்கு "அடல் சுரங்கப்பாதை' என்று மத்திய அரசு பெயர் வைத்தது
எல்லை சாலை அமைப்பு (பார்டர் ரோட் ஆர்கனைசேஷன்) மற்றும் ஆஸ்திரிய நிறுவனம் ரோதங் சுரங்கப் பாதை கட்டுமானப் பணிகளைச் செய்துள்ளன.
இதன் பயன் என்ன ?: சுரங்கப்பாதை திறக்கும் போது பனிப்பொழிவு காரணமாக ஆண்டின் 6 மாதங்களுக்குத் துண்டிக்கப்படும் பழங்குடி மாவட்டமான லஹால் ஸ்பிட்டி, ஆண்டு முழுவதும் இந்தியாவுடன் இணைந்திருக்கும்.மேலும் குளிர் காலத்தில் இமாசலப் பிரதேசம் மற்றும் லடாக் பகுதிகளில் இருக்கும் சில பகுதிகளுக்குச் செல்ல முடியாதுஇனி அந்த சிக்கல் இருக்காதுஇந்த சுரங்கப் பாதை போக்குவரத்து மூலம் இமாசலப் பிரதேசம் மற்றும் லடாக்கின் எந்தப் பகுதிகளுக்கும் செல்லலாம்இது சுற்றுலாப் பயணிகளை மட்டும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், அந்தப் பகுதிகளில் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும்மேலும், லஹால்-ஸ்பிட்டி ஆகிய இடங்களுக்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்இந்த சுரங்கப்பாதை 9 கி.மீ நீளமும் கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்திலும் உள்ளதுஇவ்வளவு உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை இதுவாகும்.
சுரங்கப்பாதை பணிகளை மேற்கொண்ட தலைமை பொறியாளர், கே.பி.புருஷோத்தமன் தனது அனுபவத்தைச் சொல்கிறார்:
""இந்த சுரங்கப்பாதை, ஆறு ஆண்டுகளுக்குள் உருவாக்க திட்டமிட்டு, 10 ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளதுஇதனால், மணாலியில் இருந்து லே செல்லும் துôரத்தில், 46 கி.மீ., குறைவதுடன், நான்கு மணி நேர, பயண நேரம் சேமிக்கப்படும்60 மீட்டர் இடைவெளியில் "சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஒவ்வொரு, 500 மீட்டர் துôரத்திலும், அவசர கால வெளியேறும் வழி அமைந்துள்ளது.சுரங்கப்பாதையின் அகலம், 10.5 மீ., என்பதுடன், இருபுறமும் தலா, 1 மீட்டர் அகல நடைபாதை உள்ளதுசுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை, பல்வேறு சிரமங்களுக்கு இடையே, வெற்றிகரமாக முடித்துள்ளோம்'' என்றார்.
சிறப்பம்சங்கள்: குதிரை லாடத்தை போன்று "யு' வடிவத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளதுஆஸ்திரேலிய தொழில்நுட்பத்தில் இந்தச் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளதுஒவ்வொரு 2.2 கிமீ தூரத்தில் சாலை திருப்பங்கள் அமைக்கப்பட்டுள்ளனஒவ்வொரு 1 கி.மீ தூரத்தில் காற்றின் தரத்தை கண்காணிக்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதையில் நாள் ஒன்றுக்கு 3,000 கார்கள், 1,500 கனரக வாகனங்கள் 80 கி.மீ வேகத்தில் செல்ல முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...