முயற்சி திருவினை ஆக்கும்
கண்டுபிடிப்புகளின் மன்னன் தாமஸ் ஆல்வா எடிசன் என்பதை நாம் அறிவோம். ஆனால் அவர் எத்தனை முறை தோல்வி அடைந்தார் என்பதை அறிந்தால் நாம், வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு அஞ்சமாட்டோம்.


கண்டுபிடிப்புகளின் மன்னன் தாமஸ் ஆல்வா எடிசன் என்பதை நாம் அறிவோம். ஆனால் அவர் எத்தனை முறை தோல்வி அடைந்தார் என்பதை அறிந்தால் நாம், வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு அஞ்சமாட்டோம்.
ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம் கற்பிக்கிறது. நாம் எப்படிச் செய்யக் கூடாது என்பதை மனதில் ஆழப்பதிக்கிறது.
எடிசன் ஒரு முறை ஸ்டோரேஜ் பாட்டரி கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றார். அவருடைய உதவியாளருக்கு ஒரே வியப்பு.
அவர் உதவியாளர் முகத்தில் ஆச்சரியக் குறி பளிச்சிடுவதைக் கண்ட எடிசன் சொன்னார்:
""ஏய் ,என்ன வியக்கிறாய்? இது நான் கண்டுபிடித்தவற்றில் முதலாவது இல்லை. 50,000 முறைகள் எப்படி செய்யக்கூடாது என்றும் கண்டுபிடித்து இருக்கிறேன்; தெரிஞ்சுக்கோ!'' என்றார்.
தாமஸ் ஆல்வா எடிசனுக்கு தனது கணக்குப் பிரிவில் இருப்பவர்களைக் கண்டாலே அவ்வளவாகப் பிடிக்காது. தனது உள்ளுணர்வை வைத்தே கணக்கு விஷயத்தில் அனைத்தையும் அவர் முடிவு செய்து விடுவார். அடிக்கடி அவர் “இந்த கணித மேதைகளிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கூறி கணக்கைப் போட சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? ஒரு பெரிய பேப்பரை எடுத்துக் கொண்டு வரிசை வரிசையாக கோடு போட்டு ஏ என்றும் பி என்றும் எக்ஸ் என்றும் ஒய் என்றும் எழுதி அந்த கட்டங்களில் ஏராளமான நம்பர்களைப் போட்டு நிரப்புவார்கள். கடைசியில் ஒன்றுக்கும் உதவாத ஒரு தப்பான விடையைத் தருவார்கள்.” என்று சொல்வது வழக்கம். தன் மனதிலேயே கணக்கைப் போட்டு உடனடியாக உள்ளுணர்வில் தோன்றியபடி விஷயத்தை முடித்து விடுவார் அவர்.
ஒரு முறை வெஸ்டர்ன் யூனியன் கம்பெனி அவரது ஒரு கண்டுபிடிப்புக்காக ஒரு லட்சம் டாலர் தொகையைத் தந்தது. அவ்வளவு பெரிய தொகையைப் பார்த்துப் பிரமித்துப் போனார் எடிசன். கம்பெனி நிர்வாகத்திடம், "எனக்கா இவ்வளவு பெரிய தொகை? இதை என்னிடம் தர வேண்டாம். நீங்களே பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆண்டொன்றுக்கு ஆறாயிரம் டாலர் வீதம் பதினேழு ஆண்டுகளுக்கு எனக்கு நீங்கள் தாருங்கள்' என்றார். அந்த நிறுவனமும் அப்படியே செய்ய சம்மதித்தது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...