முதல் உத்தியோகம்
எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில் நான் தேறவில்லை. அந்த இடைக்காலத்தில் என்ன செய்வது என்று யோசித்தேன். அப்போது காஞ்சிபுரம் நகர சபை தேர்தல் நேரம்.


எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில் நான் தேறவில்லை. அந்த இடைக்காலத்தில் என்ன செய்வது என்று யோசித்தேன். அப்போது காஞ்சிபுரம் நகர சபை தேர்தல் நேரம். சாம்பசிவம் செட்டியார், காஞ்சிபுரம் நகர சபையில் வரி வசூலிக்கிற பில் புத்தகங்களை எழுதுகிற வேலையை தந்தார்.
அதுதான் நான் பார்த்த முதல் உத்தியோகம். மாதா மாதம் கை நிறைய சம்பளமும் கொடுப்பார். எல்லாம் கால் ரூபாய் நாணயங்கள். மிகவும் கண்டிப்பானவர் சாம்பசிவம் செட்டியார். அப்போதெல்லாம் நகர சபை தலைவர்களுக்கு அதிக அதிகாரம் உண்டு.
அவர் நகர சபை தலைவராக வருவதற்கு முன், நகர சபை ஊழியர்கள், அலுவலகத்துக்கு வந்தால் சட்டை, பனியன் எல்லாவற்றையும் கழற்றி, கால்களை முன்னால் உள்ள மேஜைக்கு மேல் போட்டு, அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பார்கள்.
சாம்பசிவம் செட்டியார், தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட பின், காஞ்சிபுரம் நகர சபையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அவர், உள்ளே நுழையும் போதே ஜாடையாக அலுவலர்கள் மீது தன் பார்வையை ஓட விடுவார். அவ்வளவுதான். சட்டை, பனியன் போடாத ஊழியர்களுக்கு ஐந்து ரூபாய், மேஜை மீது கால்களை போட்டு உட்கார்ந்திருந்தால் மூன்று ரூபாய்.... இப்படி அபராதம் தீட்டி விடுவார். அப்படிப்பட்ட தலைவரின் கீழ், முதன் முதலாக வேலை செய்யும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.
(அறிஞர் அண்ணா எனும் நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...