மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சவால்கள் இல்லாமல் சுவாரசியமில்லை

""இனி வரும் காலங்களில் எல்லாமே ஆன்லைன் தான். கல்வி முதல் கடையில் விற்கும் பொருள்கள் வரை.  உணவுப் பொருள் என்பது அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 12:30 am

விஷ்ணு


""இனி வரும் காலங்களில் எல்லாமே ஆன்லைன் தான். கல்வி முதல் கடையில் விற்கும் பொருள்கள் வரை. உணவுப் பொருள் என்பது அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது. பலரும் செய்யும் தொழிலை நாமும் செய்தால் வெற்றிபெற இயலாது, நமக்கென்று ஒரு வித்தியாசமான பாதையை உருவாக்க வேண்டும் என்று யோசிக்கும் போது அது மக்களின் பிரச்னைகளை நாம் தீர்த்து வைக்கும் தொழிலாக இருக்க வேண்டும் என முடிவு செய்து, அதை மக்களின் ஆரோக்கியம் சார்ந்த தேர்வாகத் தேர்ந்து எடுத்தேன்'' என்று சொல்லும் சோமசுந்தரம் "ஹெல்த் ஆர்கானிக்' என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் இயற்கை முறையில் விளையும் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். தான் கடந்து வந்த பாதையை விவரிக்கிறார்:

நான் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன். அப்பா, தினக்கூலி அடிப்படையில் டிரைவர் ஆக வேலை செய்கிறார். அம்மா விவசாயத்தில் தினக்கூலியாகப் பணியாற்றுகிறார். ஒரே தங்கை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.

சத்தியமங்கலம் பன்னாரி அம்மன் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றேன். தொடர்ந்து மும்பையில் பல தனியார் நிறுவனங்களில் பணியாற்றினேன். மீண்டும் சொந்த ஊர் திரும்பினேன். சுய தொழில் செய்ய விரும்பினேன்.

நமது முன்னோர்கள் ரசாயன உரம் இல்லாத இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவற்றில் இருந்து உணவு பொருள்களை சாப்பிட்டதால் இப்போதும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அதற்கு உதாரணம் தான் எங்கள் ஊரில் வசிக்கும் 70 வயது பாட்டி. அவருக்கு ஒரு முடி கூட இது வரை நரைக்கவில்லை. காரணம் கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, குதிரைவாலி, செக்கு எண்ணைய் சாப்பிட்டார்கள் நோய் இல்லாமல் இருந்தார்கள். ஆனால் இன்று நாம் ரசாயன உரம் கலந்த உணவை தான் சாப்பிடுகிறோம். பல காலமாக பயன்படுத்தி வந்த ரசாயன பூச்சிக்கொல்லிகளின் விளைவாக இன்றைக்கு எல்லா பொருள்களிலும் ரசாயனங்களின் கலப்பு ஊடுருவிவிட்டது. மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இந்த ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை நாம் நிறுத்தாவிட்டால், எதிர்காலத்தில் மனித சமூகம் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க வேண்டியதிருக்கும்.

மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பொருட்களை விளைவிக்கும் விவசாயிகளே தங்களுடைய பொருளின் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட து தான் என்னுடைய சிறு நிறுவனம். முழுக்க முழுக்க ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்கிறோம்.

இதை நான் முதலில் துவங்கும்போது பலரும் சொன்ன வார்த்தை இது தான். உன் தொழில் வெற்றிபெறாது என்று, நான் அவர்களின் பேச்சை கேட்டுக்கொள்வேன், ஆனால் அதில் எனக்கு எது தேவையோ அதை மட்டும் எடுத்து கொண்டேன்.

ஆன்லைனில் பொருள்களை வாங்க முதலில் யோசித்தார்கள். ஒரு முறை வாங்கிய பொருள்களைப் பயன்படுத்திய பிறகு மீண்டும் நம்மை அழைக்கிறார்கள். இப்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ளவர்களும் ஆன்லைனில் பொருள்களை அதிகம் வாங்குகிறார்கள்.

ஒரு விவசாயி அவர்களின் பொருள்களை ஒரு தரகர் மூலம் விற்பனை செய்வதால் 20% முதல் 40% வரை அவர்களின் பொருள்களின் விலையைக் குறைத்து தரவேண்டி இருக்கும், ஆனால் எமது நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் பொது மிகக் குறைந்த சேவை கட்டணம் மட்டுமே பெறப்படுகிறது. இதனால் விவசாயிகளும் அதிக லாபத்தில் பொருளை விற்க முடிகிறது., மக்களும் குறைந்த விலையில் இயற்கை பொருட்களை வாங்க முடிகிறது.

சொந்தமாக தொழில் செய்வதால் பல சவால்களை எதிர்க்கொள்ள வேண்டிய இருக்கிறது. சவால்கள்இல்லாமல் சுவாரசியமில்லை'' என்கிறார் சோமசுந்தரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.