மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

குதிரை வால் 

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து பல தரப்பட படங்களைத் தயாரித்து வருகிறது. ஏற்கெனவே தயாரித்த "பரியேறும்பெருமாள்',

News image
Updated On :6 செப்டம்பர் 2020, 12:30 am

DIN


 
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து பல தரப்பட படங்களைத் தயாரித்து வருகிறது. ஏற்கெனவே தயாரித்த "பரியேறும்பெருமாள்',

"குண்டு' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றன. அடுத்தடுத்துத் தயாரிப்புப் பணிகளில் நிறுவனம் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வருகிறது. தற்போது இந்த நிறுவனம் தயாரித்து வரும் படம் "குதிரை வால்'. கலையரசன், அஞ்சலிப்பாட்டில் நடிக்கின்றனர்.   அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன்  - ஷ்யாம் சுந்தர்  ஆகியோர் இயக்குகிறார்கள். ராஜேஷ் கதை எழுதியுள்ளார். இது அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும் , மேஜிக்கல்  சினிமாவாகவும் இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் இது புதிய முயற்சியாக இருக்கும் என நீலம் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. யாழி பிலிம்ஸ் சார்பாக  விக்னேஷ் சுந்தரேசன் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார். விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியிடவுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.