விஜய்சேதுபதி படத்தில் டாப்சி
சமீபத்தில் டாப்சி நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில், நடிகை டாப்சி சமீபத்திய பேட்டியில் அதனை உறுதிப்படுத்தி உள்ளார்.


சமீபத்தில் டாப்சி நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில், நடிகை டாப்சி சமீபத்திய பேட்டியில் அதனை உறுதிப்படுத்தி உள்ளார். அவர் கூறியதாவது.... ""விஜய் சேதுபதியுடன் புதிய படத்தில் நான் இணைந்து நடிப்பது உண்மை தான். ஓராண்டுக்கு முன்பே இந்த படத்தில் நடிக்க சம்மதம் சொல்லி
விட்டேன். நான் தான் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என இயக்குநர் பிடிவாதமாக இருக்கிறார். கதையும் எனக்குப் பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இது ஒரு முழுநீள காமெடி படம். எனவே ஒரே கட்டமாக 28 நாட்கள் படப்
பிடிப்பை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளோம்'' என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...