ஆவணப்படத் தயாரிப்பில் இளவரசர்
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மேகன் மெர்கலை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.


இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மேகன் மெர்கலை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அரச பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹாரி அறிவித்தார். எனினும் அவர்கள் விரும்பினால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மீண்டும் அரச குடும்பம் அவகாசம் அளித்தது. இதையடுத்து ஹாரி - மேகன் தம்பதி தனது குழந்தை அர்ச்சிவுடன் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் தங்கியுள்ளனர்.
கலிஃபோர்னியா மாகாணத்தின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஹாலிவுட் நடிகர் டைலர் பெர்ரிக்கு சொந்தமான மாளிகை மலை உச்சியில் 22 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் ஹாரி தனது மனைவி மேகன் மற்றும் மகன் ஆர்ச்சியுடன் வசித்து வருகிறார்.
இந்தத் தம்பதிகள் சமூகப் பிரச்னை சார்ந்த ஆவணப்படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
அவர்கள் குழந்தைகள் நிகழ்ச்சிகள், இயற்கை தொடர்பான ஆவணப்படங்களை "வெப்' தொடர்களைத் தயாரித்து வழங்க இருக்கிறார்கள். ""அரச குடும்பத்திலிருந்து விலகி எனக்கு சம்பாதித்து வாழ்க்கை நடத்துவது எத்தனை கடினமானது என்பது நன்றாகத் தெரியும். ஆனால் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்கள் இருவரது கவனமெல்லாம் நாங்கள் தயாரிக்கவுள்ள தொடர்களின் உள்ளடக்கத்தை உருவாக்குவதில் இருக்கும்'' என்கிறார் ஹாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...