தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிடி ஸ்கேன் அவசியமா?

"ஒரு முறை சிடி ஸ்கேன் செய்வது 300 முதல் 400 முறை மார்பு எக்ஸ்ரே எடுப்பதற்குச் சமம்... சிடி ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது' என்ற அதிர்ச்சி தகவலை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்

News image
Updated On :22 மே 2021, 4:52 pm

கண்ணம்மா

"ஒரு முறை சிடி ஸ்கேன் செய்வது 300 முதல் 400 முறை மார்பு எக்ஸ்ரே எடுப்பதற்குச் சமம்... சிடி ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது' என்ற அதிர்ச்சி தகவலை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் உடல் நலமில்லை என்பதற்காக டாக்டரிடம் மருத்துவ .. ஆலோசனை கேட்கப் போனாலும் "சிடி ஸ்கேன்' எடுக்கணும் என்று சொல்வது வழக்கமாக இருக்கிறது. சிடி ஸ்கேன்களில் பலவித ஸ்கேன்கள் இருந்தாலும் கட்டணங்கள் எக்ஸ்ரே எடுப்பதை விடப் பல மடங்கு அதிகம். சர்வதேச அணு சக்தி கழகம் சேகரித்திருக்கும் புள்ளி விபரங்களின் படி அடிக்கடி சிடி ஸ்கேன்கள் எடுப்பதால் புற்றுநோய் வரும் அபாயம் அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இளம் வயதில் சிடி ஸ்கேன்கள் அடிக்கடி எடுக்கக்கூடாது.

கரோனா காலகட்டத்தில் சிறிய பாதிப்பிற்குக் கூட சிடி ஸ்கேன்கள் எடுக்க வேண்டும் என்கிறார்கள். பாதிப்பு குறைவாக இருந்தாலும், நோய் அறிகுறி வெளியே தெரியாமல் இருந்தாலும் சிகிச்சையில் குணப்படுத்தி விடலாம். சிடி ஸ்கேன்கள் எடுக்க வேண்டிய அவசியமில்லை. கரோனா பாசிட்டிவாக கண்டுபிடிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவரிடம் "போய் சிடி ஸ்கேன்கள் எடுத்துக் கொண்டு வாருங்கள்' என்று சொல்வது வழக்கமாகிவிட்டது.

சிறிய அளவில் தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு உரிய மருந்துகளை உட்கொண்டால் போதும்... கரோனா குணமாகிவிடும். உடலின் உள்ளேயும் வெளியேயும் வரும் வீக்கங்களுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. வீக்கம் கரோனாவால் மட்டும் உருவாகியுள்ளது என்று சொல்லமுடியாது, வீக்கம் காரணமாகத் தேவையான மருத்துவச் சிகிச்சையைத் தாண்டி அதிகப்படியான சிகிச்சை தரப்பட்டு உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது.'' என்கிறார் டாக்டர் ரன்தீப் குலேரியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.