அமீரின் புதுப்படம்
"மௌனம் பேசியதே', "ராம்', "பருத்திவீரன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அமீர். இந்த மூன்று படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றன.


"மௌனம் பேசியதே', "ராம்', "பருத்திவீரன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அமீர். இந்த மூன்று படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றன. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக தடம் பதித்தார் அமீர். பின்பு "ஆதி பகவன்' என்ற படத்தை இயக்கினார்.
இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இப்படத்துக்குப் பிறகு அமீர் எந்தப் படமும் இயக்காமல் இருந்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கிய "வடசென்னை' படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் அவரது "ராஜன்' கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர் படம் இயக்கவுள்ளார்.
இப்படத்தின் கதையை வெற்றிமாறன் - தங்கம் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். அமீர் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவுள்ளார். இதனை அமீர் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இப்படத்துக்கு யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், பட தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்துக்கு "இறைவன் மிகப் பெரியவன்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதற்கான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட தகவல்களை விரைவில் படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. கவிஞர் பிரமிள் எழுதிய மானுடம் சார்ந்த பார்வைதான் இந்தப் படத்துக்கான கரு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...