பக்கத்து வீட்டுக் கதை
த்ரில்லர் படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். அதிலும் கதைக்களம் " பீட்சா' படப் பாணியில் ஒரு வீட்டிற்குள்ளேயே அமைவதாக இருந்தால் சுவாரஸ்யம் இன்னும் கூடவே செய்யும்.


த்ரில்லர் படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். அதிலும் கதைக்களம் "பீட்சா' படப் பாணியில் ஒரு வீட்டிற்குள்ளேயே அமைவதாக இருந்தால் சுவாரஸ்யம் இன்னும் கூடவே செய்யும். அந்த வகையில் பக்கத்து பக்கத்தில் இருக்கும் இரு வீட்டில் நடக்கும் உளவியல் ரீதியான படமாக உருவாகி வருகிறது
"ரீ'. கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார் சுந்தரவடிவேல். வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய கைபேசி யுகத்தில், பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று யாரும் கண்டுகொள்வதில்லை. அப்படியிருக்க பக்கத்து வீட்டில் சின்ன சத்தம் வந்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாத ஒருவரின் உளவியல் எப்படியிருக்கும்.... அதன் விளைவாக ஏற்படும் சம்பவங்கள் என்ன என்பதுதான் களம். சில உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையின் ஓட்டத்தில் சமகால பிரச்னை ஒன்றையும் கையில் எடுத்து அதையும் கவனமாக சொல்லியிருப்பதாக தெரிவிக்கிறார் இயக்குநர். ஸ்ரீஅங்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இயக்குநர் கே. பாலசந்தரின் ஆஸ்தான எழுத்தாளர் அனந்துவின் சகோதரி பேரன் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக காயத்ரி ரமா நடிக்கிறார்.
பிரசாத் குமார், சங்கீதா பால், மணிசங்கர், சுரேஷ்பாபு ஆகியோருடன் படத்தின் இயக்குநர் சுந்தரவடிவேல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவு-தினேஷ் ஸ்ரீனிவாஸ் . இசை-ஹரிஜி . பாடல்கள்-செல்வநம்பி, தோழன். எடிட்டிங்- கே.ஸ்ரீனிவாஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...