மலையாளத்தில் ஸ்ரீராம்
"பசங்க' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீராம். அந்தப் படத்துக்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார்.


"பசங்க' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீராம். அந்தப் படத்துக்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார். அண்மையில் ஓடிடி தளத்தில் வெளிவந்த "நவரசா' படத்தில் இடம் பெற்ற "ரெளத்திரம்' பகுதியின் கதாநாயகனாக முத்திரை பதித்தவர், தற்போது மலையாளத்தில் நடிக்கிறார். வேணு கோபாலகிருஷ்ணன் தயாரிப்பில் "எக்ஸிட்' எனப் பெயரிடப்பட்டுள்ள படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். புதுமுக இயக்குநர் ஷாகீன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். கடந்த ஜனவரி முதல் கேரளத்தின் குட்டிக்கணம் மலைப்பகுதியிலும் பாலக்காட்டிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படம் தமிழிலும் உருவாக இருக்கிறது. ஸ்ரீராம் பேசும் போது...."" என் தந்தை சிவ.ராமகிருஷ்ணா மலையாளத் திரைப்பட உலகில் மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். மோகன்லால், மீனா நடிப்பில் "வர்ணப்பகிட்டு', குஷ்பு, சுரேஷ்கோபி நடிப்பில் "அனுபூதி' போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். அதனால் எனக்கு மலையாளம் புதிதல்ல. ஜீத்து ஜோஸப் இயக்கத்தில் வெளிவந்த "பாபநாசம்' படத்தில் கமலின் உதவியாளராக நடித்தேன். அதுவும் எனக்கு மலையாளத்தில் பெரும் வெளிச்சத்தை தந்தது. இப்படித்தான் இந்தப் பட வாய்ப்பு வந்தது.
அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கவுள்ள புதிய வெப்சீரிஸில் நடிக்கிறேன். இதுவும் எனக்கு தனி அங்கீகாரத்தை கொடுக்கும் என நம்புகிறேன். இந்த வெப்சீரிஸில் "லட்சுமி' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தியா பாண்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழில் வெப் சீரிஸில் மட்டுமல்ல மேலும் 2 புதிய படங்களிலும் நடிக்கிறேன். அடுத்தடுத்த வாய்ப்புகளில் நம்பிக்கையாக உழைக்கக் காத்திருக்கிறேன்'' என்றார் ஸ்ரீராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...