முதலிடத்தில்...
நவரத்தினங்கள் ஒன்பது வகையான அரிய மருத்துவத்தன்மை கொண்டவை. மனதிற்கு மகிழ்ச்சியையும் அளிப்பவை. இவற்றில் முத்து என்ற நவரத்தினமும் ஒன்று. மணிகளின் அரசன் என முத்து போற்றப்படுகிறது.


நவரத்தினங்கள் ஒன்பது வகையான அரிய மருத்துவத்தன்மை கொண்டவை. மனதிற்கு மகிழ்ச்சியையும் அளிப்பவை. இவற்றில் முத்து என்ற நவரத்தினமும் ஒன்று. மணிகளின் அரசன் என முத்து போற்றப்படுகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் முத்தின் பயன்களை உணர்ந்து பயன்படுத்தியுள்ளனர்.
அக்கால இலக்கியங்களிலும், பாடல்களிலும் முத்தின் மதிப்பு மற்றும் முத்துமாலைகள் பற்றியும் குறிப்புகள் உண்டு. பழங்கால தமிழ் மகளிர் முத்துமாலை அணிந்துள்ளனர்.
சிப்பிகள் கடலில் காணப்படுகின்றன. இந்த சிப்பிகள் மூலம் செயற்கை முத்து வளர்ப்பில் ஜப்பான் முன்னணி வகித்து வருகிறது. ஜப்பானில் தயாராகும் முத்துகளுக்கு உலகளவில் மவுசு அதிகம். முத்துகள் வர்த்தகத்தின் மூலம் ஜப்பான் கணிசமாக வருவாய் ஈட்டி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அங்கு நிலவும் சிதோஷ்ண நிலை தான்.
ஜப்பானில் முத்து எடுக்கும் தொழிலை பிரதானமாக செய்கிறார்கள். ஆண்டுக்கு 20 டன் முத்துகள் உற்பத்தி செய்கிறார்கள். 1980-ஆம் ஆண்டிலேயே 70 டன் முத்துகளை உற்பத்தி செய்துள்ளார்கள்.
எல்லா சிப்பிகளிலும் முத்து காணப்படுவதில்லை. உலக அளவில் மன்னார்வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் சிறப்பான முத்துக்கள் கிடைக்கின்றன. பஹ்ரெய்ன், கலிபோர்னியா, பனாமா போன்ற இடங்களில் முத்துக்கள் கிடைக்கின்றன. பெர்சியன் வளைகுடாவிலிருந்து கிடைக்கும் முத்துக்களே மிகச் சிறப்பானதென கருதப்படுகிறது. 1 லட்சம் சிப்பிகளிலிருந்து 5 சதவிகிதம் மட்டுமே முத்துகளை பெற முடியும்.
பத்து நிறங்களில் முத்து கிடைக்கிறது. எனினும் பொதுவாக கிரீம் நிறமாகவோ அல்லது பிங்க் நிறமாகவோதான் இருக்கும். வெள்ளை, நீலம், சாம்பல், பிரவுன் நிறங்களிலும் முத்து காணப்படுகிறது.
ஒவ்வொரு சிப்பிக்குள்ளும் முத்து கருவினை கவனமாக உட்செலுத்தி, தண்ணீருக்குள் மூழ்கி வைக்கவேண்டும். தண்ணீரின் வெப்பநிலை 15-30 டிகிரி செல்சியசில் இருக்கவேண்டும். உட்செலுத்திய முத்து கரு ஏழு மாதத்திலிருந்து ஓர் ஆண்டிற்குள் நேர்த்தியான முத்துக்களை உருவாக்கும்.
குறிப்பாக 15 டிகிரிக்கு அதிகமானால் முத்து பளபளப்பை இழந்துவிடுகிறது. 15 டிகிரிக்கு குறைவானால் முத்துகள் வலிமை இழந்துவிடுகிறது.
சீனா, ஜப்பான், ஹாங்காங், இலங்கை நாடுகளில் இருந்து முத்துக்கள் நம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு மும்பையில் பெருமளவில் விற்பனையாகின்றன.
வியாபாரிகள் இம்முத்துக்களை வாங்கி தரத்திற்கேற்ப பிரித்து பதப்படுத்தி மெருகூட்டி வடிவமைத்து தனியாகவோ, நகைகளில் சேர்த்தோ விற்கின்றனர்.
சந்தையில் விற்கப்படும் முத்துக்கள் மீன் வாசனையோடு இருக்கும்.
சில வகையான ரசாயனக் கரைசலில் முத்துக்களை மூழ்க வைத்து உலர வைக்கும்போதுதான் முத்துக்கள் வெண்மை நிறத்தைப் பெறுகின்றன.
உலக அளவில் முத்து என்றதும் நினைவுக்கு வருவது ஜப்பான் நாடு. இந்திய அளவில் முத்து என்றதும் நினைவுக்கு வருவது ஐதராபாத் நகரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...