சினிமாவுக்கு வரும் பாடகர் மகன்
நாகூர் அனிபா உள்ளிட்ட இஸ்லாமிய பாடகர்களுடன் சம காலத்தில் பயணம் செய்தவர் காயல் ஏ.ஆர். ஷேக் முகமது.


நாகூர் அனிபா உள்ளிட்ட இஸ்லாமிய பாடகர்களுடன் சம காலத்தில் பயணம் செய்தவர் காயல் ஏ.ஆர். ஷேக் முகமது. இவர் பாடிய "ஈச்சை மரத்து இன்பச் சோலையில்.... , " தமிழகத்து தர்காக்கள்.... உள்ளிட்ட பாடல்கள் இன்றும் பிரபலம். பல சினிமா பாடல்களையும் பாடி புகழ் பெற்றவர். இப்போது இவரது மகன் ரஷ்மி ரூமி குறும்படத் தயாரிப்பு மற்றும் சினிமா தயாரிப்புகளில் இறங்கியுள்ளார். ரூமி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் "சம்பாத்தியமே சகலமும்' என்ற குறும்படத்தை தயாரித்து அதில் நடித்தும் உள்ளார். அருண் பாலா மணி இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார். முகமது சமீர், அதிரை தம்பிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் குறித்து ரஷ்மி ரூமி பேசும் போது... "இங்கே ஒருவனுக்கு பணம் மீது அத்தனை வெறி. பணத்துக்காக எதையும் செய்ய துணிந்தவன். எதற்காக அவனுக்கு இத்தனை வெறி, வேட்கை... இப்படித்தான் நம் பார்வை இருக்கும். ஆனால், பணம்தான் எல்லாவற்றுக்கும் முக்கியம். அதை சரியான வழியில் சம்பாதிக்க வேண்டும். சம்பாத்தியம் மூலம் வருகிற பணம்தான் சமூகத்தில் அந்தஸ்தை உயர்த்தும் என்பதே கதை. குறும்படங்களைத் தொடர்ந்து சினிமாக்களிலும் இயங்க இருக்கிறேன். தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என அத்தனை துறைகளிலும் முத்திரை பதிக்கும் எண்ணம் உள்ளது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...