பத்தாம் வகுப்பு மாணவர்களின் சாதனை..!
பார்வையற்றவர்களுக்கான பிரத்யேக எச்சரிக்கை உணர்வு கண்ணாடியை நாகை தேசிய மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சபரிவாசன், ஹஜ் அப்சல் முகமது ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர்.


பார்வையற்றவர்களுக்கான பிரத்யேக எச்சரிக்கை உணர்வு கண்ணாடியை நாகை தேசிய மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சபரிவாசன், ஹஜ் அப்சல் முகமது ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர்.
சாதாரணக் குடும்பத்தில் பிறந்த இவர்கள், சாதனை மாணவர்களாக மாறியுள்ளனர். சபரிவாசனின் தந்தை நாராயண மூர்த்தி பத்தராகப் பணிபுரிகிறார். ஹஜ் அப்சல் முகமது தந்தை ஹாஜா நஜூமுதின் தையல் தொழில் செய்து வருகிறார்.
நாகை நாலுகால் மண்டபத்தில் செயல்படும் இந்தப் பள்ளி 119 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தப் பள்ளிக்கு பார்வையற்றவர்கள் சிலர் அகர்பத்திகள், பூஜைப் பொருள்களை விற்பனை செய்ய வந்து செல்வது வழக்கம். அப்போது, அவர்கள் பள்ளி படிக்கட்டுகள், தூண்கள், நாற்காலிகள் போன்றவற்றில் இடித்து கொள்வர்.
இதைப் பார்த்த மாணவர்கள் சபரிவாசன், ஹஜ் அபசல் முகமது ஆகிய இருவருக்கும் இந்தச் சம்பவம் மனதில் ஆழமாகப் பாதித்துள்ளது. அப்போது, உலக அளவில் 4 கோடி பேருக்கு கண் பார்வையற்றவர்களாக இருப்பதும், இதில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 50 சதவீதம் பேர் என்பதும் இருவருக்கும் தெரியவந்தது.

இதையடுத்து, பார்வையற்றவர்கள் இடையூறின்றி வெளியே சென்று வரும் வகையில் சென்சார், ஸ்பீக்கர் பொருத்தப்பட்ட பிரத்யேக கண்ணாடியைத் தயார் செய்வது என இருவரும் முடிவெடுத்து தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, சமூக அறிவியல் ஆசிரியை பிரேமலதா ஆகியோரிடம் தெரிவித்தனர். இதன்படி, அவர்கள் வழிகாட்டியபடி மாணவர்கள் 107 கிராம் எடையுள்ள எச்சரிக்கை உணர்வு கண்ணாடியைத் தயாரித்தனர்.
இந்தக் கண்ணாடியை பார்வையற்றவர்கள் அணிந்து செல்லும்போது ஓர் அடி தூரத்தில் இடையூறு ஏற்பட்டால், ஒலி எழுப்பி எச்சரிக்கையை ஏற்படுத்தும். இந்தக் கண்ணாடியை நாகை அரசு காப்பகமான அன்னை சத்யா இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு அணிவித்து சோதனையும் செய்யப்பட்டது. அதேசமயம், எடை சற்று அதிகமாகவும், 2 அடி தூரத்தில் இடையூறு ஏற்படும்போது எச்சரிக்கை ஒலி எழுப்பவும், காது கேட்காதவர்களுக்கு அதிர்வு ஏற்படுத்தும் வகையில் இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் எனவும் முதியோர் தெரிவித்தனர். இதன்படி, மேலும் சிறப்பாக கண்ணாடியை மேம்படுத்தி உருவாக்கியுள்ளனர் இந்த மாணவர்கள்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 2022-ஆம் ஆண்டு நவம்பரில் நாகை மாவட்டத்தில் நடைபெற்ற போட்டியில், எச்சரிக்கை உணர்வு கண்ணாடியின் ஆய்வுக் கட்டுரையும் மாநிலப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாநில அளவில் சிறந்த 30 கட்டுரைகளில் எச்சரிக்கை உணர்வு கண்ணாடி தேர்வானது. பின்னர், நாக்பூரில் நடைபெற்ற 108 -ஆவது அகில இந்திய அறிவியல் விஞ்ஞானிகள் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட 2 ஆய்வுக் கட்டுரைகளில் ஒன்றாகவும் ஆனது.
இதேபோன்று, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட இவர்களின் கட்டுரை குஜராத்தில் நடைபெற்ற 30 ஆவது தேசிய அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டு பரிசும் பெற்றது.
மாணவர்கள் சபரிவாசன், ஹஜ் அப்சல் முகமது ஆகியோர் தங்களது கண்ணாடி குறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜிடம் செயல் விளக்கம் அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்தக் கண்ணாடியை அதிக அளவில் உற்பத்தி செய்து, பார்வையற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் இருவரும் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து இருவரும் கூறியதாவது:
""இந்தக் கண்ணாடியில் சென்சார், வைபரேட்டர் கருவி, ஸ்பீக்கர் பொருத்தி தயார் செயயப்பட்டுள்ளது. கண்ணாடியைப் பார்வையற்றவர்கள் அணிந்து கொண்டு வெளியே செல்லும்போது, சென்சாரில் வெளிப்படும் சிக்னல் 3.7 அடி தூரத்தில் இடையூறு இருந்தால் எச்சரிக்கை ஒலி, அதிர்வை ஏற்படுத்தும். இதைப் பயன்படுத்தி இடையூறுகளில் இருந்து விலகி செல்ல முடியும்'' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...