தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திரைக்கதிர்

இப்போது 'திருமலை', 'வாலி' ஆகிய திரைப்படங்கள் ரீ-ரிலீஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

News image
Updated On :3 மார்ச் 2024, 8:44 am

DIN

இப்போது 'திருமலை', 'வாலி' ஆகிய திரைப்படங்கள் ரீ-ரிலீஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதனையடுத்து வரும் தினங்களில் 'கோ', 'ஷாஜகான்', 'சிட்டிசன்' ஆகிய திரைப்படங்களும் வெளியாகவிருக்கின்றன. ஆனால், இப்படியான ரீ-ரிலீஸ் வழக்கம் தொடங்கப்பட்டது முதல் பலரும் 'கில்லி' திரைப்படத்தைதான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த 2004-ஆம் ஆண்டு விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியான 'கில்லி' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படத்தைத் திரையில் மீண்டும் காண வேண்டும் என்கிற ஆர்வத்தில் ரசிகர்கள் ரீ-ரிலீஸுக்காக எதிர்பார்க்கிறார்கள். சமூக வலைதளப் பக்கங்களில் 'கில்லி' திரைப்படம் ஏப்ரல் 17-ஆம் தேதி ரீ-ரிலீஸாகிறது என்ற அறிவிப்பு போஸ்டரைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Story image

'ஜெயிலர்', 'ஜவான்' என இடைவிடாமல் இசையமைத்து வரும் அனிருத், தனது ரிலாக்ஸ் டைமாக மியூசிக் கான்சர்ட்களை ஒப்புக்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவரது 'ஹூக்கும்' இசை நிகழ்ச்சி, சமீபத்தில் துபாயில் கோலாகலமாக நடந்தது. அடுத்த வேல்டு டூர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. வரும் மே மாதம் 9-ஆம் தேதி மெல்பர்ன் நகரிலும், அதனைத் தொடர்ந்து 11-ஆம் தேதி சிட்னி நகரிலும் நடைபெறுகிறது. 'ஜெயிலர்' படத்திற்கு பின், ரஜினியுடன் 'வேட்டையன்' படத்திற்கும் கமலின் 'இந்தியன்2', 'இந்தியன்3' படங்களும், அஜித்தின் 'விடாமுயற்சி', விக்னேஷ் சிவனின் 'லவ் இன்ஸுரன்ஸ் கார்ப்பரேஷன்', சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் படம் எனப் பல படங்கள் கைவசம் உள்ளது. தவிர, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கும் இசைமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி திருமணம் வரும் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி தெற்கு கோவாவில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.அதே சமயம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் திருமணப் பத்திரிகைகளை டிஜிட்டலில் மட்டும் அனுப்புவது, பட்டாசுகளைத் தவிர்ப்பது, பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்பது போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.அதே போல, சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவுகளாக சுகர்-ப்ரீ, ஆயில் ப்ரீ, பாயில் ப்ரீ உணவுகளெல்லாம் பிரத்தியேகமாகத் தயார் செய்யப்பட்டன. ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் தனிப்பட்ட முறையில் டயட் பிளான்கள் இருக்கும், அதையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கேற்ற ஆரோக்கிய உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்த விழாவின் சிறப்பு.

Story image

ஐஸ்வர்யாராய், அபிஷேக் தம்பதி இருவரும் பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து கலந்து கொள்ளாமல் இருந்ததையொட்டி இந்தச் செய்திகள் பேசு பொருளானது. கடைசியாக நந்தாவின் மகன் நடித்த வெப் சீரியஸ் அறிமுக விழாவில் குடும்பத்தோடு ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். தற்போது அபிஷேக் பச்சன் தனது 48-ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு தனது கணவருக்கு ஐஸ்வர்யா ராய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஐஸ்வர்யா ராய் அவரது மகள் மற்றும் கணவருடன் இருக்கும் படங்கள் இடம் பெற்றுள்ளது. பிறந்த நாள் வாழ்த்து செய்தியில், ''பிறந்த நாள் வாழ்த்துகள் என்றும், மிகுந்த மகிழ்ச்சி, அன்பு, அமைதி, சாந்தம் மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கு கடவுள் ஆசிர்வதிப்பாராக'' என்றும் இறுதியில் பிரகாசிக்கவும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.