ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் ஆலன் மார்டினர். இவர் விசித்திரமான பேர்வழி. எப்போதும் 'துருதுரு'வென்று சுறுசுறுப்பாய் இருப்பார்.
அடிக்கடி ஏதாவது புதுமையை செய்துகொண்டே இருக்க வேண்டும் என்கிற அவரது ஆசைக்கு அளவே கிடையாது. ஆகையால் இவர் தனது நடை, உடை பாவனைகளில் வழக்கத்துக்கு மாறாக, நேரெதிர் மாற்றங்கள் பல செய்து அடிக்கடி மக்களையும், நண்பர்களையும் திகைக்க வைத்தார்.
இப்படி ஆலன் மார்டினர் செய்துவந்த புதுமைகளில் ஒன்றை மட்டும் உலகமே இன்றும் கடைப்பிடித்து வருகிறது. அது என்ன தெரியுமா?
அன்று அவரது பிறந்த நாள். ஆகையால் அவர் மிகவும் கஷ்டப்பட்டு என்னன்னவோ யோசனைகளைச் செய்தார். கடைசியில் அவருக்கு அற்புதமான யோசனை வந்தது. அதுவரை நூறாண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த எந்தவொரு விருந்திலும் அல்லது பொதுவிழாவிலும் வந்திருப்பவர்கள் மேடையேறிப் பேசும் எவரும், 'நண்பர்களே! அன்பர்களே' என்றுதான் ஆங்கிலத்தில் அழைப்பது வழக்கம்.
எவ்வளவு நேரம் பேசினாலும் இடையிடையே இந்த இரண்டு வார்த்தைகளை மட்டுமே சொல்லிவந்தனர். அதில் கைவைத்தார் ஆலன் மார்டினர்.
வழக்கப்படி, 'அன்பர்களே, நண்பர்களே' என அழைப்பதற்குப் பதிலாக எல்லோரையும் பிரமிக்க வைத்தார். குறிப்பாக, அவர் அழைத்த இரண்டு சொற்கள் அனைத்துப் பெண்களையும் கவர்ந்துவிட்டது. அதுவரை பொது விழாக்களில் கலந்துகொள்ளும் பெண்களை முதன்மைப்படுத்தி, தனியாக அன்பாக யாரும் குறிப்பிட்டு வழக்கமே இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில், ஆலன் மார்டினர் முக்கியத்துவம் கொடுத்து அழைத்து கூறிய இரண்டு சொற்கள் 'லேடீஸ் அன்ட் ஜென்டில்மென்' என்பதாகும்.
1893 செப்டம்பர் 11-இல் அமெரிக்கர்களை மேலும் அதிர்ச்சிக்கும் ஆனந்தத்துக்கும் உள்ளாக்கும் வண்ணம் 'சிஸ்டர்ஸ் அன்ட் பிரதர்ஸ்' என்று சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற சர்வசமய மாநாட்டில் உரையாற்றியபோது கூடியிருந்தோரை வரவேற்கும்விதமாக கூறிய பாசம் நிறைந்த இரண்டு சொற்கள்.
பெண்களை முதன்மைப்படுத்தி அழைத்ததால், உலகப் பெண்கள் இயக்கம் அனைத்தும் சுவாமி விவேகானந்தரைப் பற்றியதும் வரலாறு.