செயலியை உருவாக்கும் பின்னணி
ழென் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் " நீ பார்எவர்'. சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர்.
ஒய். ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, எம். ஜே. ஸ்ரீராம், ரீதிகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர் வித்யா, பிரதோஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
புதுமுக இயக்குநர் அசோக்குமார் இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஸ்வின் ஹேமந்த் இசையமைத்திருக்கிறார். படத்தின் கதைக் கரு பற்றி இயக்குநர் பேசும் போது...
'நவீன கவனப் பொருளாதாரத்தில் பயனர்களை ஈடுபாட்டுடன் வைத்திருப்பது எளிதான காரியமல்ல.
புதிய போட்டியாளர்கள் ஒவ்வொரு நாளும் சந்தையில் நுழைகிறார்கள், அதே நேரத்தில் பயனர்கள் தங்கள் டிஜிட்டல் அனுபவங்களிலிருந்து எப்போதும் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். பயன்பாட்டு ஈடுபாட்டை அதிகரிக்கவும், ஒட்டும் பயனர் அனுபவத்தை உருவாக்கவும் நிரூபிக்கப்பட்ட அன்றாடம் செயலிகள் அதிகரித்து வருகின்றன.
அப்படி ஒரு செயலியை உருவாக்குவதன் பின்னணியில் தயாராகி இருக்கிறது இதன் திரைக்கதை. இது ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும் படமாக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'தருணம்' எனும் திரைப்படத்தை தயாரித்த ழென் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. புதுமுகங்களின் கூட்டணியில் இன்றைய இணைய உலகில் பேசு பொருளாக இருக்கும் செயலியை பற்றிய படமாக உருவாகி இருக்கிறது.'' என்றார் அசோக்குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.