வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

டிஜிட்டலில் கான்சிட்டி

அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் நடிப்பில் வெளியான 'கான்சிட்டி' திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது.

Published On :

அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் நடிப்பில் வெளியான 'கான்சிட்டி' திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது. ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் குற்றப் பின்னணியைக் கொண்ட கதையாக உருவான இப்படம், திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரையரங்குகளில் இப்படம் எதிர்பார்த்த அளவில் வசூல் சாதனை படைக்கவில்லை என்றாலும், அர்ஜுன் தாஸின் நடிப்பு மற்றும் ஷான் ரோல்டனின் பின்னணி இசை ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. திரையரங்குகளில் இப்படத்தைத் தவறவிட்ட பல சினிமா ரசிகர்கள் இதன் டிஜிட்டல் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.

யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம், ஓ.டி.டி. தளத்தில் வெளியாவதன் மூலம் உலகளவில் உள்ள அதிகமான தமிழ் சினிமா ரசிகர்களைச் சென்றடையும் என்றும், டிஜிட்டல் தளத்தில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, கடனில் சிக்கித் தவிக்கும் குடும்பத்துக்கு எதிர்பாராத விதமாக பணம் அச்சிடும் இயந்திரம் கிடைப்பதைத் தொடர்ந்து நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.