'இசைத் துறையில் எதிர்வரும் தலைமுறையினருக்கு சிம்பொனி, ஆர்கெஸ்ட்ரா இசையைக் கொண்டு போய்ச்சேர்ப்பதே என் நோக்கம்' என்கிறார் லிடியன் நாதஸ்வரம்.
இசையமைப்பாளர், பியானோ கலைஞர், டிரம்ஸ் கலைஞர், பாடகர், இசைத் தயாரிப்பாளர் உள்ளிட்ட பன்முகத் தன்மைகளைக் கொண்ட இவர், திருக்குறளை இசையின் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதன்படி, தனது முதல் அசல் சிம்பொனியான 'சிம்பொனி எண் 1', ' நியூ பிகினிங்ஸ்'-யை உலகப் புகழ்பெற்ற லண்டன் சிம்பொனி வாத்தியக் குழுவுடன் இசையமைத்துப் பதிவு செய்துள்ளார். இதனால் அவர் சிம்பொனியைப் பதிந்த முதல் இளம்வயது இசையமைப்பாளராக அங்கீகரிக்கப்படுகிறார்.
இதுகுறித்து அவர் கூறியது:
'சிம்பொனி குறித்த எனது கனவை மார்ச் 2025-இல் வெளியிட்டேன். 2026-இல் முழுவதும் நிறைவடைந்து, பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படைக் கட்டமைப்பு மூன்று நாள்களில் இசையமைக்கப்பட்டது. சிம்பொனியை இசையமைத்திருக்கலாம் என்று ஏங்கிய பல இசையமைப்பாளர்கள் சார்பாகவும், எதிர்காலத்தில் இசையமைக்க விரும்புவோருக்காகவும் இசையமைக்கப்பட்டுள்ள இந்த சிம்பொனியை அவர்கள் தங்களுடைய சொந்தப் படைப்பாகவே நினைக்கலாம்.
இசைக் கருத்தை எழுதுதல், அதை பல இயக்கங்களாக உருவாக்குதல், முழு ஆர்கெஸ்ட்ராவுக்கு அதை முறைப்படுத்துதல், ஸ்கோர்- பார்ட்ஸ்களைத் தயாரித்தல் என உலகத்தரம் வாய்ந்த இசைக் கலைஞர்களுடன் அதைப் பதிவு செய்தல், மிக்ஸிங் & மாஸ்டரிங் மூலம் அதற்கு இறுதி வடிவம் கொடுப்பது என பல கட்டங்களைக் கடந்தே சிம்பொனி உயிர் பெறுகிறது.
இந்த சிம்பொனியை மேட் டங்க்லி வழிநடத்தியுள்ளார். இது உருவாகத் திட்டத் தயாரிப்பாளராக, ஆண்ட்ரூ டி. மேக்கே திகழ்கிறார். லண்டனின் புகழ்பெற்ற அபி ரோடு ஸ்டூடியோஸில் சவுன்ட் மிக்ஸிங், மாஸ்டரிங் பணிகள் செய்யப்பட்டுள்ளன.
இளையராஜா, இசங் யுன், அகிரா இஃபுகுபே ùள, அகுடகாவா உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்கள் சிம்பொனி, ஆர்கெஸ்ட்ரா எழுத்துலகுக்கு வெவ்வேறு வழிகளில் பங்களித்துள்ளனர். இந்தத் தொடர் பயணத்தின் ஒரு பகுதியே எனது பணி.
ஆர்கெஸ்ட்ரா எழுத்து முறை என்பது கிளாசிக்கல் கச்சேரியாக அரங்குகளுக்குள் மட்டுமே முடங்கிவிடாமல், இந்தியத் திரைத்துறை, ஆல்பங்கள், வணிக ரீதியான இசை, நேரடி நிகழ்ச்சிகள், கல்வி, சர்வதேச கூட்டு முயற்சிகள், கலாசாரக் கதை சொல்லல் ஆகியவற்றின் சக்தி வாய்ந்த பகுதியாக மாற வேண்டும்.
நியூ பிகினிங்ஸ் வெளியீட்டைத் தொடர்ந்து, உலகில் உள்ள முக்கிய அரங்குகளில் அடுத்தடுத்து நேரடி நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
உலக இசை தினமான 2026 ஜூன் 21-இல் சென்னை மியூசிக் அகாதெமியில் மாலை 4 மணிக்கு இந்த சிம்பொனியின் ஆடியோ பிரீமியர், வெளியீட்டு விழா நடைபெறுகிறது' என்கிறார் லிடியன் நாதஸ்வரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

14.7.1976: ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைக்க செயற்கைக் கோள்

நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும் கலம்காரி ஓவியங்கள்!

ஆஸ்திரேலியாவில் 3 அரிய சோழா் கால சிலைகள் மீட்புக்கு குடியரசு துணைத் தலைவா் வரவேற்பு

சிம்பொனி இசைக் குழுவுடன் சாதனை: லிடியன் நாதஸ்வரத்துக்கு விமான நிலையத்தில் வரவேற்பு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


