பிறை, வில், லாடம் போன்ற வடிவம் கொண்ட நீர்நிலை வளைவு ஏரியாகும். இவை ஒரு காலத்தில் ஆற்றின் ஒரு பகுதியாக இருந்தவை. பிறகு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கும்.
வெள்ளப்பெருக்கால் புதிய வழித்தடத்தில் ஆறு ஓடும் போதும் இவை ஏற்படலாம். பிறகு இவை வளைவு ஏரிகளாக மாறி, அமைதியாக மாறிவிடும். மழைத்தண்ணீர் தான் இதில் தங்கும்.
அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் ரியோகிராண்ட் ஆற்றின் ஒரு பகுதியில் தொடர்ச்சியாக உள்ள வளைவு ஏரிகள், 'ரெசாகாஸ்' என அழைக்கப்படுகின்றன.
ஆஸ்திரேலியாவில் இந்த ஏரிகள் 'பில்லா பாங்க்ஸ்' என அழைக்கப்படுகின்றன.
இந்தியாவில் கபர்தாஸ் ஏரி இதற்கு உதாரணம். இதனை கன்வார் ஏரி எனவும் அழைப்பர். பீகார் மாநிலத்தில் பேகுசராய் மாவட்டத்தில் உள்ளது. புர்சி கண்டக் ஆற்றின் போக்கு மாறியதால் உருவான பிறை வடிவ ஏரி.
மத்திய ஆசிய பறக்கும் வழித்தடத்தில் இருப்பதால், குளிர்காலத்தில் சைபீரியா போன்ற பகுதிகளிலிருந்து சுமார் 58 வகையான வலசைப் பறவைகள் இங்கு வருகின்றன. இதனால் பறவைகள் சரணாலயம் ஆகியுள்ளது. இதில் படகு சவாரி உண்டு. ஜெய்மங்களா கார்க் மந்திரும் உள்ளது. ஏரி இயற்கையான சூழலில் அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணியர் நிறைய வருகை தருகிறார்கள்.
உலக அளவில், வட அமெரிக்காவில் சிகோட் ஏரி, இங்கிலாந்தில் கிழக்கு சசெக்ஸில் உள்ள குக்மியர் ஹெவன்(மிகப் பிரபலமான வளைவு ஏரிகளில் ஒன்று) மிசோரி ஆற்றில் கார்டட்டர் ஏரி, டென்னஸில் ரீல் புட் ஏரி எனச் சிலவற்றை இந்த ஏரிக்கு உதாரணமாகக் கூறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







