இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

நாகமலை சமணர் வரலாற்றுச் சின்னங்கள்

மேல்மருவத்தூர்-செய்யூர் நெடுஞ்சாலையில் உள்ள நாகமலையில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுச் சான்றுகளுடன் சிறிய அளவிலான பல்லவர் கால குடைவரை கோயில் உள்ளது.

Updated On :

மேல்மருவத்தூர்-செய்யூர் நெடுஞ்சாலையில் உள்ள நாகமலையில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுச் சான்றுகளுடன் சிறிய அளவிலான பல்லவர் கால குடைவரை கோயில் உள்ளது. இதனை சமணத் துறவியர்கள் தங்களது வாழ்விடமாகவும், சமயத்தைப் போதிக்கும் கூடமாகவும், நோய்களைத் தீர்க்கும் இயற்கை மூலிகை மருத்துவத்தை அளிக்கும் இடமாகவும் பயன்படுத்தி உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட மதுராந்தகத்தை அடுத்த விராலூரில் உள்ள இந்த மலையானது "பஞ்சபாண்டவர்கள் மலை', "கருப்பங்குன்று' உள்ளிட்ட பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. மலையில் துறவிகள் செய்த அறப்பணிகள் குறித்த விவரங்கள் மலைக்குன்றுகளில் கல்வெட்டுகளாக உள்ளன.

மூலிகைச் செடிகளை அரைக்கப் பயன்படுத்தும் கல் உரல்கள், மழைக்காலங்ளில் மழைநீர் உள்புகாதவாறு இயற்கையாக அமைந்த குகைகள், கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட தீர்த்தங்கரர்களின் திருவுருவச் சிலைகள் உள்ள தடயங்கள் வரலாற்றுச் சான்றுகள் இன்றளவிலும் காணப்படுகின்றன.

8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்த எழுத்துகளுடன் கூடிய தமிழ் இலக்கியத் தொகுப்பு கல்வெட்டுகளும் சிறிய குடவரை கோயிலில் உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாகமலைக்கு தொல்பொருள் ஆராய்ச்சி மாணவர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணியர் என நாள்தோறும் ஏராளமானோர் இங்கு வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். வடமாநிலங்களில் இருந்து சமணர்கள் மாதம்தோறும் குறிப்பிட்ட சில நாள்களில் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.