'மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நோக்கம் உண்டா?' என்பதை அறிய பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் மாஸ்க், ஸ்டீவன் ஹெய்ன் ஆகியோர் ஓர் ஆய்வை நடத்தினர்.
அமெரிக்க ஆர்வலர்கள் 200 பேரிடம் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களாகக் கருதும் ஏழு அம்சங்கள் குறித்தும், பின்னர் 16 பொது அம்சங்கள் குறித்து 2 ஆயிரம் பேரிடமும் கருத்துகளைக் கேட்டனர். இதை அலசி ஆராய்ந்தவுடன் ஜப்பான், இந்தியா, போலந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஆயிரம் பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
ஆய்வில் தெரியவந்த 16 அம்சங்கள் குறித்து ஆய்வாளர்கள் கூறியது:
'அதிசயக்கத்தக்க விதத்தில் மனிதர்கள் பொதுவான லட்சியங்களையே கொண்டிருக்கின்றனர். சுய தேவைகள் பூர்த்தி, குடும்பம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருவதே வாழ்க்கையின் அம்சங்களாகும். அபூர்வமான குணங்கள் பொதுவாக இருக்கின்றன. தன்னிடம் இருக்கும் பணத்தைத் தனக்காகவோ, தன்னைச் சார்ந்தவருக்காகவோ செலவழிப்பதைவிட அடுத்தவருக்கு வழங்குவதே மனிதர்களுக்குத் திருப்தி அளிக்கிறது எனத் தெரியவருகிறது. வெவ்வேறு நாடுகளில் உள்ள வெவ்வேறு கலாசாரத்தின் அடிப்படையில் சிறு வேறுபாடுகள் உள்ளன.
மிகச் சிறந்த மனிதனாக வாழ்தல், குடும்பத்துக்காக உழைத்து அவர்களை நன்கு பராமரித்தல், மிக நெருங்கிய உறவுகளைக் கண்டுபிடித்து, அந்த உறவுகளைத் தொடர்தல், மதம் அல்லது ஆன்மிகக் கோட்பாடுகளின்படி வாழ்தல், அனைவராலும் மதிக்கப்பட்டு, உயர்ந்த அந்தஸ்துடன் வாழ்தல், எப்போதும் சந்தோஷமாக இருந்து வாழ்க்கையை அனுபவித்தல், வாழ்க்கையை நடத்த இயல்பாக உடல்நலத்துடனும் நிதி வசதியுடனும் போதுமான சுயதேவை பூர்த்தியை அடைதல், பணக்காரனாகி விரும்பியதை வாங்கும் வசதியுடன் வாழ்தல் ஆகும்.
தவிர தனக்கென ஒரு தரத்தை உருவாக்கிக் கொண்டு அதன்படி வாழ்வதோடு தனது கொள்கைகளைக் கடைப்பிடித்தல், தன் வாழ்க்கை முறையில் நல்ல ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துதல், தான் இருப்பதை உணரும் வண்ணம் அடுத்தவர்களுக்கு உற்சாகத்தையும் உணர்வூக்கத்தையும் ஏற்படுத்துதல், தான் செய்யும் தொழிலில் திறம்பட வேலை செய்து திருப்தி அடைதல், வாழ்க்கை உங்களை நோக்கி எறியும் அனைத்தையும் ஏற்று தாங்கி சமாளித்து வாழ்தல், உடல் நலத்தைச் சீராகப் பராமரித்து ஆரோக்கியத்துடன் வாழ்தல், தனக்கு வந்தவற்றை உளமார ஏற்று, மாற்ற முடியாதவற்றை அப்படியே ஏற்று, மன அமைதியுடன் வாழ்தல், தான் வாழும் பகுதி மக்களுக்கும் தனது சமுதாயத்துக்கும் சேவைகள் புரிதல் உள்ளிட்டவற்றை மனிதர்கள் பெரும்பான்மையாகக் கருதுகின்றனர்' என்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்லைன் மூலம் ஆதார் எண் புதுப்பிப்பது எப்படி?

பணியிடங்களில் ‘சவால்கள்’

குதிரைப் பேர அரசியல்: முதல்வா் விஜய் தெளிவுப்படுத்த வேண்டும் - பிரேமலதா

பணம் திரட்டுவதே அன்புமணி ஆதரவாளா்களின் நோக்கம்! - மருத்துவா் ராமதாஸ் குற்றச்சாட்டு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


