தமிழில் முருக்குதல், முறுக்குதல், முரி, முறி, கருப்பு, கறுப்பு போன்ற சொற்கள் நேர்பொருளும் நிழற்பொருளுமாய் ஒன்றின் ஒன்று மேவி வருகின்றன.
ஆங்கிலத்தில் இர்ய்க்ன்ஸ்ரீற் (கண்டக்ட்-நடத்துவது) என்ற சொல்லை, அதே எழுத்துக்கூட்டலில் "காண்டக்ட்' என ஒலித்தால், "நடத்தை' என்று பொருள்படுகிறது. இவை போல்வன மொழியின் இயல்புகள்.
முருக்குதல் - அழித்தல், கொல்லுதல். "மூங்கில் முருக்கி' - யானை மூங்கிலை வளைத்து அழித்து என்று பொருள். (அகம்:332) "மன் எயில் முருக்கி' - திண்ணிய மதிலை நெருக்கி அழித்து என்று பொருள். (சிறுபாண்-247) முறுக்கு - திரித்தல், சுற்றுதல். முறுக்கு உறுத்த - மரத்திரிகையைச் சுற்றுதல் செய்து (அகம்:224). "பிடியடி முறுக்கிய பெருமிப பூசல் - ஆண் யானை குழியில் அகப்படவே, பெண் யானை அதை மேலே ஏற்றுதற்குப் படியாக, ஒரு மரத்தை முறுக்கி ஒடித்துப் போடுகிறது (அகம்:224). முறுக்கி அழிக்கும் நிலை முருக்குதல் ஆகிறது.
முருங்கைக் காய், ஒரு கயிற்றை முறுக்கி விட்டதுபோல பல முடிச்சுகளையுடைய நீளமான காயாக இருப்பதால் அப்பெயர் பெற்றது. முருங்கையில் இருவகை உண்டு. ஒன்று முள் முருங்கை; மற்றது உணவுக்குதவும் முருங்கை.
""வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்பக்
கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எறிமருள் பூஞ்சினை இனச்சிதர் ஆர்ய
(அகம்:41)
விடியற்காலம். முருங்க மரத்தின் பெரிய அரும்புகள் முறுக்கு நெகிழ்ந்து மலர்ந்த, நெருப்பை ஒத்த சிவந்த மலர்கள். இது முள் முருங்கை என்று தெரிகிறது. இது அகன்ற இலைகளையுடையது. அம்புகள் எய்தால் "தச்சு தச்சு' என்று உள்ளே ஊடுருவி நின்றுகொள்ளும்.
""........ ........ அலங்குசினை
நாரில் முருங்கை நவிரல் வான்பூச்
சூரலங் கடுவளி எடுப்ப ஆரூற்று
உமைதிரைப் பிதிர்வில் பொங்கி முன்
கடல்போல் தோன்றல காடு .....
(அகம்-1)
அசையும் கிளையினையுடைய நாரில்லாத முருங்கையின் குலைந்துபோன வெள்ளிய பூக்கள், சூறாவளிக் காற்று வேகமாக வீசவே, ஆர்த்தலுற்று (ஓசையுடன்) எங்கும் உதிர்ந்து, பரந்து கிடக்கிறது. வெண்ணிற அலைகள் மோதும் கடற்கரைபோலக் காட்சியளிக்கும் காடு அது.
முருங்கை மரங்கள் பாலை நிலத்தில், வேனிற்காலத்தில் பூத்துக் குலுங்கும். முள் முருங்கை இலை அகலமானது, மற்றதன் இலை சிறியது.
இத்தகைய இடங்கள் பலவற்றைச் சங்கப் பாடல்களில் காண்கின்றோம். அதனால் காரணப் பெயரையுடைய "முருங்கை' தமிழ்ச்சொல்லே என்பது உறுதிப்படுகிறது. சிங்களம் இதை "முருங்கா' எனக் கடன் வாங்கியுள்ளது என்பதே உண்மை.
"முருங்கை' சிங்களச் சொல் என்று சிறந்த திறனாய்வாளரான ஆ.வேலுப்பிள்ளை தம் நூலில் எழுதியுள்ளதாக, கவிக்கோ ஞானச்செல்வன் (தினமணி கதிரில்) எழுதியுள்ளார். சிறந்த திறனாய்வாளரான ஆ.வேலுப்பிள்ளை, சங்கப் பாடல்களை நினைவு கூர்ந்திருந்தால், "முருங்கை' தமிழ்ச்சொல்லே என விளக்கியிருப்பார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஏப். 9 வரை மழைக்கு வாய்ப்பு

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைத்தான் திமுக முடித்துள்ளது! காட்பாடி அதிமுக வேட்பாளா்

4.4.1976: காமராஜுக்கு 'பாரத ரத்னா' விருது: அவரது சகோதரி ராஷ்டிரபதியிடம் பெற்றார்
வங்கி மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை: ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


