இந்த வார கலாரசிகன்

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் எதிலுமே வித்தியாசமாகச் செயல்படுபவர். அவரது துணைவேந்தர் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. பதவிக்காலம் முடிவடைவதற்கு ம

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் எதிலுமே வித்தியாசமாகச் செயல்படுபவர். அவரது துணைவேந்தர் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு மூன்று மாத விடுப்பு எடுத்துக்கொள்ள விதிமுறைகள் அனுமதிக்கின்றன. விடுப்பு எடுத்துக் கொள்ளாவிட்டால், அந்த மூன்று மாதங்களும் இரட்டிப்பு ஊதியம் பெறலாம் என்கிறது பல்கலைக்கழக விதிமுறைகள்.

முனைவர் ம.இராசேந்திரன் மூன்று மாத விடுப்பில் சென்றுவிட்டார் என்பதுமட்டுமல்ல, தான் இனிமேல் எந்த ஊதியம் பெறும் பதவியையும் வகிப்பதில்லை என்றும் முடிவெடுத்துவிட்டார். கடந்த மாதம் 20-ஆம் தேதி தமது பல்கலைக்கழக ஊழியர்களிடமிருந்து விடைபெறும்போது, "நிகழ்வுகளின் பதிவில்' என்கிற தலைப்பில் 19.6.2008-இல் அவர் பதவியேற்றுக்கொண்டு, ஓய்வுபெறும் நாள் வரையிலான தனது செயல்பாடுகளைப் பட்டியலிட்டு ஒரு புத்தகம் வெளிக்கொணர்ந்திருக்கிறார். ""கனவுகளோடு வந்தேன் (19.6.2008) நினைவுகளோடு புறப்படுகிறேன் (20.3.2011). வருவேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை. ஆனாலும், வரவேற்றீர்கள். பணியேற்ற நாளில் அறிவித்ததைப்போல பணிநீட்டிப்பில் வரமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு புறப்படுகிறேன்...'' என்கிற அவரது பதிவு, முனைவர் ம.இராசேந்திரனின் 33 மாத தமிழ்ப்பணியை நேரில் கண்டறிந்தவர்களின் விழிகளில் நீர்கோக்க வைக்கும் என்பது நிஜம்.

உலகத் தமிழ் மாநாட்டால் உருவாக்கப்பட்டதுதான் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. தமிழ் உணர்வு நீர்த்துப்போகாமல், மொழி வளர்ச்சிக்குப் புத்துயிர் ஊட்டிய பெருமை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு உண்டு. அந்த மாநாடு வெறும் அரசியல் மாநாடாக மாறிவிடாமல், அதைத் தமிழ் மாநாடாக நடத்திக் காட்டிய பெருமை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கும் அதன் துணைவேந்தர் ம.இராசேந்திரனுக்கும் உண்டு.

ஓய்வுபெற்ற பிறகு என்னதான் செய்யப்போகிறார் முனைவர் ம.இராசேந்திரன் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவல் எனக்கு ஏற்பட்டது. அவர் சொன்ன பதிலைக் கேட்டபோது, ஜேம்ஸ் கேமரூனின் "அவதார்' ஆங்கிலத் திரைப்படத்தில் மரத்துக்கு மரம் தாவிப் பறக்கும் "நாவி' நாயகனும் நாயகியும்போல உற்சாகத்தில் மனம் பறக்கத் தொடங்கியது.

"கணையாழி' இலக்கிய இதழை மீண்டும் கொண்டுவரப் போகிறாராம் மனிதர். மீண்டும் கணையாழி என்கிற செய்தியைவிட மகிழ்ச்சியான செய்தி ஒன்று இருக்க முடியுமா?

**************************************************

சண்டை கரகரப்பு, அசதி. ஏதாவது மருத்துவரிடம் போகலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில், கவிஞர் காசிமுத்து மாணிக்கத்தின் தொலைபேசி வந்தது. மருத்துவரிடம் போக இருக்கிறேன் என்று சொல்லவும், மனிதர் பிடித்துக் கொண்டுவிட்டார்.

""உடனடியாகக் கிளம்பி ஷெனாய் நகருக்கு வாருங்கள். மருத்துவர் எச்.வி.ஹண்டே ரொம்ப நாளாக உங்களைச் சந்திக்க வேண்டும் என்று சொல்கிறார். நீங்கள் மருத்துவரைப் பார்த்ததாகவும் இருக்கும். அவர் உங்களைச் சந்தித்ததாகவும் இருக்கும்'' என்கிற கவிஞரின் வேண்டுகோளைத் தட்டமுடியவில்லை.

கவிஞர் காசி முத்துமாணிக்கம் எல்லோருக்கும் இனியவர். துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவருக்கு நண்பர். கொளத்தூரில் அவரை எதிர்த்துப் போட்டியிடும் சைதை துரைசாமியும் நண்பர். திருநாவுக்கரசரும் நண்பர். இல.கணேசனும் நண்பர். எப்படித்தான் இவரால் எல்லோருக்கும் நண்பராக இருக்க முடிகிறது என்று நான் மட்டுமல்ல, எனது நண்பர்கள் பலரும் வியப்பதுண்டு.

1967-இல் பூங்காநகர் தொகுதி உறுப்பினராக சுதந்திரா கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவையில் நுழைந்தவர் மருத்துவர் ஹண்டே. அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த அந்த சட்டப் பேரவைக்கு ஈடு இணையான இன்னொரு சட்டப் பேரவை இன்றுவரை அமையவில்லை எனலாம். கலகலப்புக்குக் கலகலப்பு; கண்ணியத்துக்குக் கண்ணியம். சட்டப்பேரவை விவாதங்கள் எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்த அவை அது.

அந்த அவையில் எதிர்க்கட்சி வரிசையை அலங்கரித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பி.ஜி.கருத்திருமன், கே.விநாயகம், எச்.வி.ஹண்டே, பி.கே.எம்.மூக்கையா தேவர், சங்கரையா போன்ற ஜாம்பவான்கள். அனல் பறக்கும் விவாதங்கள், அரசைக் கதிகலங்கவைக்கும் எதிர்க்கட்சியினரின் கேள்விக் கணைகள், அதற்கு அண்ணா தலைமையிலான அமைச்சரவையிலிருந்து தரப்படும் நகைச்சுவை ததும்பும் பதில்கள்... சட்டப் பேரவை விவாதங்கள் மக்களால் சுவாரஸ்யமாகப் பேசப்பட்ட காலம் அது.

மருத்துவர் ஹண்டே எனக்கு வைத்தியம் பார்த்ததைவிட நாங்கள் பல கருத்துகளையும் பழைய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதுதான் அதிகம். மருத்துவர் ஹண்டே மூதறிஞர் ராஜாஜியின் நம்பிக்கைக்குரிய தொண்டர். முதல்வர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மூப்பனார் என்று பலருக்கும் நண்பர். எல்லா கட்சிகளையும் ஒரு சுற்றுச்சுற்றி வந்துவிட்டிருப்பவர். இப்போது பாரதீய ஜனதா கட்சியில்தான் இருக்கிறாரா என்று அவரிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ள சற்றுத் தயக்கம். அதனால் கேட்கவில்லை.

எங்கள் சந்திப்பின் அடையாளமாக அவர் எழுதிய "மூதறிஞர் இராஜாஜி' என்கிற புத்தகம் ஒன்றைப் பரிசளித்தார். ராஜாஜி பற்றிய அத்தனை தகவல்களையும் தொகுத்துப் புத்தகமாக்கி இருக்கிறார். தலைப்பைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

"முரசொலி'யில் அப்போது மூதறிஞர் இராசாசி என்று எழுதுவது வழக்கம். ராஜாஜி முரசொலிக்கு அஞ்சல் அட்டையில் ஒரு கடிதம் எழுதியதாகக் கூறுவார்கள். அந்தக் கடிதத்தில், ""முரசொலி ஆசிரியருக்கு, சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எழுதிக்கொள்வது, வணக்கம். தங்களது பத்திரிகையில் எம்.ஜி.ராமச்சந்திரன் எம்.ஜி.ராமச்சந்திரன் என்றும், ஜெயலலிதா ஜெயலலிதா என்றும் குறிப்பிடப்படும்போது ராஜாஜியாகிய நான் மட்டும் ஏன் இராசாசி என்று அழைக்கப்படுகிறேன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது'' என்று எழுதியிருந்தார் என்பார்கள்.

மேற்படி சம்பவத்தை எனக்குக் கூறியவர் "முரசொலி'யில் அப்போது வேலை பார்த்த "நீரோட்டம்' அடியார். இதுபற்றிய சரியான தகவலை முதல்வர் கருணாநிதி ஒருவர்தான் வெளிப்படுத்த முடியும். எதற்காக இந்த உபன்யாசம் என்றால் மருத்துவர் எச்.வி.ஹண்டே தனது புத்தகத்துக்கு மூதறிஞர் ராஜாஜி என்றே பெயரிட்டிருக்கலாம் என்று தோன்றியது, அதனால்தான்.

**************************************************

ஓவ்வொரு மழையிலும்' என்கிற கவிதைத் தொகுப்பு விமர்சனத்துக்கு வந்திருந்தது. "வரலாறு என்பது வந்து போனவர்களின் கணக்கல்ல, தந்து போனவர்களின் கணக்கு' என்கிற அட்டைப்பட வரிகளில்தான் எத்தனை ரசனை.

கவிஞர் க.ஆனந்த் என்பவர் தனது கவிதைத் தொகுப்பை தன்னை உருவாக்கிய அத்தனை ஆசிரியர்களுக்கும் அர்ப்பணித்திருக்கிறார். நெகிழவைத்து விட்டீர்கள் ஆனந்த். அதைவிட உங்களது "பெற்ற மனம்' என்கிற கவிதை அழவே வைத்துவிட்டது.

பழகியதுதான்

பள்ளிவிட்டு வரும்

பிள்ளைக்காகக்

காத்திருந்தது

என்றாலும்

இந்த முறை

வலித்தது

அதே பிள்ளைக்காக

முதியோர் இல்லத்தில்

காத்திருக்கையில்!

அடுத்த வாரம் சந்திப்போம்...

ண்டை கரகரப்பு, அசதி. ஏதாவது மருத்துவரிடம் போகலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில், கவிஞர் காசிமுத்து மாணிக்கத்தின் தொலைபேசி வந்தது. மருத்துவரிடம் போக இருக்கிறேன் என்று சொல்லவும், மனிதர் பிடித்துக் கொண்டுவிட்டார்.

""உடனடியாகக் கிளம்பி ஷெனாய் நகருக்கு வாருங்கள். மருத்துவர் எச்.வி.ஹண்டே ரொம்ப நாளாக உங்களைச் சந்திக்க வேண்டும் என்று சொல்கிறார். நீங்கள் மருத்துவரைப் பார்த்ததாகவும் இருக்கும். அவர் உங்களைச் சந்தித்ததாகவும் இருக்கும்'' என்கிற கவிஞரின் வேண்டுகோளைத் தட்டமுடியவில்லை.

கவிஞர் காசி முத்துமாணிக்கம் எல்லோருக்கும் இனியவர். துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவருக்கு நண்பர். கொளத்தூரில் அவரை எதிர்த்துப் போட்டியிடும் சைதை துரைசாமியும் நண்பர். திருநாவுக்கரசரும் நண்பர். இல.கணேசனும் நண்பர். எப்படித்தான் இவரால் எல்லோருக்கும் நண்பராக இருக்க முடிகிறது என்று நான் மட்டுமல்ல, எனது நண்பர்கள் பலரும் வியப்பதுண்டு.

1967-இல் பூங்காநகர் தொகுதி உறுப்பினராக சுதந்திரா கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவையில் நுழைந்தவர் மருத்துவர் ஹண்டே. அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த அந்த சட்டப் பேரவைக்கு ஈடு இணையான இன்னொரு சட்டப் பேரவை இன்றுவரை அமையவில்லை எனலாம். கலகலப்புக்குக் கலகலப்பு; கண்ணியத்துக்குக் கண்ணியம். சட்டப்பேரவை விவாதங்கள் எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்த அவை அது.

அந்த அவையில் எதிர்க்கட்சி வரிசையை அலங்கரித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பி.ஜி.கருத்திருமன், கே.விநாயகம், எச்.வி.ஹண்டே, பி.கே.எம்.மூக்கையா தேவர், சங்கரையா போன்ற ஜாம்பவான்கள். அனல் பறக்கும் விவாதங்கள், அரசைக் கதிகலங்கவைக்கும் எதிர்க்கட்சியினரின் கேள்விக் கணைகள், அதற்கு அண்ணா தலைமையிலான அமைச்சரவையிலிருந்து தரப்படும் நகைச்சுவை ததும்பும் பதில்கள்... சட்டப் பேரவை விவாதங்கள் மக்களால் சுவாரஸ்யமாகப் பேசப்பட்ட காலம் அது.

மருத்துவர் ஹண்டே எனக்கு வைத்தியம் பார்த்ததைவிட நாங்கள் பல கருத்துகளையும் பழைய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதுதான் அதிகம். மருத்துவர் ஹண்டே மூதறிஞர் ராஜாஜியின் நம்பிக்கைக்குரிய தொண்டர். முதல்வர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மூப்பனார் என்று பலருக்கும் நண்பர். எல்லா கட்சிகளையும் ஒரு சுற்றுச்சுற்றி வந்துவிட்டிருப்பவர். இப்போது பாரதீய ஜனதா கட்சியில்தான் இருக்கிறாரா என்று அவரிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ள சற்றுத் தயக்கம். அதனால் கேட்கவில்லை.

எங்கள் சந்திப்பின் அடையாளமாக அவர் எழுதிய "மூதறிஞர் இராஜாஜி' என்கிற புத்தகம் ஒன்றைப் பரிசளித்தார். ராஜாஜி பற்றிய அத்தனை தகவல்களையும் தொகுத்துப் புத்தகமாக்கி இருக்கிறார். தலைப்பைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

"முரசொலி'யில் அப்போது மூதறிஞர் இராசாசி என்று எழுதுவது வழக்கம். ராஜாஜி முரசொலிக்கு அஞ்சல் அட்டையில் ஒரு கடிதம் எழுதியதாகக் கூறுவார்கள். அந்தக் கடிதத்தில், ""முரசொலி ஆசிரியருக்கு, சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எழுதிக்கொள்வது, வணக்கம். தங்களது பத்திரிகையில் எம்.ஜி.ராமச்சந்திரன் எம்.ஜி.ராமச்சந்திரன் என்றும், ஜெயலலிதா ஜெயலலிதா என்றும் குறிப்பிடப்படும்போது ராஜாஜியாகிய நான் மட்டும் ஏன் இராசாசி என்று அழைக்கப்படுகிறேன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது'' என்று எழுதியிருந்தார் என்பார்கள்.

மேற்படி சம்பவத்தை எனக்குக் கூறியவர் "முரசொலி'யில் அப்போது வேலை பார்த்த "நீரோட்டம்' அடியார். இதுபற்றிய சரியான தகவலை முதல்வர் கருணாநிதி ஒருவர்தான் வெளிப்படுத்த முடியும். எதற்காக இந்த உபன்யாசம் என்றால் மருத்துவர் எச்.வி.ஹண்டே தனது புத்தகத்துக்கு மூதறிஞர் ராஜாஜி என்றே பெயரிட்டிருக்கலாம் என்று தோன்றியது, அதனால்தான்.

*****

வ்வொரு மழையிலும்' என்கிற கவிதைத் தொகுப்பு விமர்சனத்துக்கு வந்திருந்தது. "வரலாறு என்பது வந்து போனவர்களின் கணக்கல்ல, தந்து போனவர்களின் கணக்கு' என்கிற அட்டைப்பட வரிகளில்தான் எத்தனை ரசனை.

கவிஞர் க.ஆனந்த் என்பவர் தனது கவிதைத் தொகுப்பை தன்னை உருவாக்கிய அத்தனை ஆசிரியர்களுக்கும் அர்ப்பணித்திருக்கிறார். நெகிழவைத்து விட்டீர்கள் ஆனந்த். அதைவிட உங்களது "பெற்ற மனம்' என்கிற கவிதை அழவே வைத்துவிட்டது.

பழகியதுதான்

பள்ளிவிட்டு வரும்

பிள்ளைக்காகக்

காத்திருந்தது

என்றாலும்

இந்த முறை

வலித்தது

அதே பிள்ளைக்காக

முதியோர் இல்லத்தில்

காத்திருக்கையில்!

அடுத்த வாரம் சந்திப்போம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com