புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

உலகின் முதல் சட்ட வல்லுநரும் பழைய நூலகமும்!

பாபிலோனிய நாகரிகத்தின் முக்கிய அரசர்கள் மூவேந்தர்கள். இந்த மூன்று அரசர்களின் பெயர்கள் நெபுகத்நேசர், ஹம்முராபி, அசூர்பாணிபால். இம்மூவரின் புகழ் இவ்வுலகில் வரலாறு உள்ள அளவும் மகிழ்ந்து பேசப்படும். நெபுக

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:00 pm

டி.எஸ்.தியாகராஜன்

பாபிலோனிய நாகரிகத்தின் முக்கிய அரசர்கள் மூவேந்தர்கள். இந்த மூன்று அரசர்களின் பெயர்கள் நெபுகத்நேசர், ஹம்முராபி, அசூர்பாணிபால். இம்மூவரின் புகழ் இவ்வுலகில் வரலாறு உள்ள அளவும் மகிழ்ந்து பேசப்படும்.

நெபுகத்நேசர்

இவர் கி.மு.5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசர். சால்டிய வம்சாவளியினர். இவரது ஆட்சிக்காலத்தில் 140 மைல்கள் சுற்றளவு உள்ள ஏரியைக் கட்டினார். வேளாண்மைக்கு பயன்படுத்தப்பட்ட நீரின் மீதியை வாய்க்கால்கள் மூலம் நீர்த்தேக்கங்களுக்குக் கொண்டு செல்லும் முறையை நடைமுறைப்படுத்தினார் என்ற செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இவ்வரசர்தான் அன்றைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான "தொங்கும் தோட்டத்தை' அமைத்தக் கலைஞர்.

ஹம்முராபி

இவர் ஆதி பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் 6-வது அரசர். இவர் கி.மு.1948 முதல் கி.மு.1905 வரை ஆட்சி புரிந்தார். இவரைத்தான் உலகம், "உலகில் தோன்றிய முதல் சட்ட வல்லுநர்' என்று பாராட்டி மகிழ்கிறது. இவர் சுமேரியர்களின் சட்டங்களையும், பண்டைய சுமேர், அகேட் போன்ற இடங்களில் உள்ள வேளாண்மை, வாணிபம், சமயம், அரசு தொடர்பான சட்டங்கள் மற்றும் அமோரிட் மக்களின் சட்டங்களையும் தொகுத்தார். பின்னர் அவைகளைச் சுருக்கியும், எளிமையாக்கியும் 8 அடி உயர உருளை வடிவமான கருங்கல் பாறையின் மீது பொறித்தார்.

இச்சட்டத் தொகுப்பு தீர்க்கதரிசியான மோசஸின் சட்டங்களுக்கு இணையானவை எனக் கருதப்பட்டது. இந்த சட்டத் தொகுப்பு பொறிக்கப்பட்ட கல்லை 1902-இல் "சூசா' நகரில் அகழாய்வு செய்தபோது கண்டுபிடித்தார்கள். இதில் 284 சட்டங்கள் அடங்கியுள்ளன. தனி நபர்களின் சொத்துரிமை, குடும்பநலம், தொழில், வாணிபம் என்ற தலைப்புகளில் அவைகள் அடங்கியிருந்தன. ஹம்முராபி அரசனின் சட்டங்கள், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது போன்ற சட்டங்கள்.

அசூர்பாணிபால்

இவர் அசிரிய அரச மரபைச் சேர்ந்தவர். இவரே உலகின் மிகப்பெரிய நூலகத்தை அக்காலத்தில் வைத்திருந்தார் என்று கூறுவர். ஆம், 22 ஆயிரம் களிமண் பலகை நூல்களைச் சேகரித்து நூலகம் அமைத்திருந்தார். இவைகளில் அமேரிய சமயம் சார்ந்த பாடல்கள், பாபிலோனிய இலக்கியங்கள், மருத்துவக் குறிப்புகள், அரசின் ஆவணங்கள், அறிவியல் மற்றும் சமயம் சார்ந்த விவரங்கள், அரச வம்சாவளிக் குறிப்புகள் எல்லாம் இருந்தன. இந்த நூலகத்தை வெகு கவனமாக அவர் காலம் வரை பாதுகாத்து வந்தார்.

ஒவ்வொரு மண் பலகையிலும் பேரரசரின் முத்திரை பதிக்கப்பட்டது. இது தற்காலத்தில் நூலகங்களில் நூல்களில், இடும் முத்திரை போன்றது. தன்னுடைய காலத்திற்குப் பின்னும் நூலகத்தில் உள்ள நூல்களுக்கு ஆபத்து நேரிடா வண்ணம் இருக்க இப்படி எழுதிவைத்தார்.

""இவற்றை திருடுபவர்கள் அகர், பெலிட் தெய்வங்களின் கோபத்திற்கு உட்பட்டு, அழிந்து விடுவார்கள்'' இவ் வகையான நூலகங்கள், அரண்மனைகளாகட்டும், கோயில்களாகட்டும், இணைக்கப்பட்டிருந்தன. "பார்சிப்பா' என்ற இடத்தில் இருந்த நூலகத்தைத் தவிர பிற நூலகங்களின் பெரும்பான்மையானவை அழிந்துவிட்டன. பார்சிப்பா நூலகப் பலகைகள் நகல் எடுக்கப்பட்டு, "நினேவா' என்ற இடத்தில் "அசூர்பாணிபால்' தனது நூலகத்தில் பாதுகாப்பாக வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.