பா.ஜம்புலிங்கம் டுவீட் என்ற சொல்லுக்கு சிறு உரையாடல், குறு விவாதம், குறு பகிர்வு, நறுக்கு இடுகை, நறுக்குப் பகிர்வு, செய்திப் பகிர்வு ஆகிய சொற்களைக் கொள்ளலாம் என்கிறார். ப.இரா.இராச அம்சன், மெல்லொலி, பறவைகளின் கிரீச்சொலி, கீச்சொலி, மெல்லிய சிறிய பறவையின் மெல்லோசை, மென்குரல், குறைஒலி ஆகிய சொற்களையும், என்.ஆர்.ஸத்யமூர்த்தி, இச்சொல்லுக்கு நேரிடையான பொருள் புள்ளொலி என்றும், அணிசேர் பொருள் தாழ்குரல், மென்குரல், ஈனக்குரல் என்றும், டிஜிடல் பொருளில் குறுஞ்செய்தி, குறுந்தரவு, சிறுசெய்தி, சிறுதரவு என்னும் பெயர்ச்சொற்களையும், குறுஞ்செய்தியிடு, குறுந்தரவிடு, குறுங்கருத்திடு, சிறுதகவலிடு என்னும் வினைச்சொற்களையும் கூடக் கொள்ளலாம் என்கிறார்.