வாஜபேய யாகம்

வாஜபேய யாகம், பார்ப்பனர், புரோகிதராக அல்லது தலைமைக் குருவாக உயர்பதவி பெறும்பொழுது செய்யப்படும் யாகமாகும்.
வாஜபேய யாகம்
Published on
Updated on
1 min read

வாஜபேய யாகம், பார்ப்பனர், புரோகிதராக அல்லது தலைமைக் குருவாக உயர்பதவி பெறும்பொழுது செய்யப்படும் யாகமாகும். அரசனும் இராசசூய யாகம் செய்த பின்னர், பேரரசாக மாறிய பொழுது வாஜபேய யாகத்தைச் செய்யலாம் என்று புறநானூறு குறிப்பிடுகிறது.

பூஞ்சாற்றூர் பார்ப்பான் கெளணியன் விண்ணந்தாயன் செய்த வேள்வியைப் பற்றிப் புறநானூறு (166) குறிக்கிறது. இது வாஜபேய யாகமாகும். வேள்வி செய்யும்போது, கலைமானின் தோலினைப் போர்த்திக்கொண்டு செய்தல் மரபாகும். வேள்வியின்போது பணிவிடை செய்தற்குப் பத்தினிகள் மூவர்க்கும் குறையாமல் இருத்தல் வேண்டும். இவ்வகையான சடங்குகள் வடநாட்டிலிருந்து பின்னர் தமிழகம் வந்தது.

பார்ப்பான் கெளணியன் விண்ணந்தாயன், இருபத்தொரு வேள்வித் துறைகளைக் குறைவின்றிச் செய்து முடித்த புகழ்பெற்ற அறிவுடையோர் மரபில் வந்தவர் (வரி 8-9); அவரும் வேள்வித் தொழில் செய்பவர் (வரி 10); மேலும், அந்த யாகத்தில் அவருடைய மனைவியரும் துணைபுரிந்தனர் (வரி 15-18) என்று புலவர் ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டுள்ளார்.

நன் றாய்ந்த நீள் நிமிர்சடை

முது முதல்வன் வாய்போகாது (புறம்:166)

யாகங்கள் இருபத்தொன்றாகும். சோம யாகங்கள் ஏழு, ஹவிர் யாகங்கள் ஏழு, பாக யாகங்கள் ஏழு. இவற்றில் சோம யாகங்கள் ஏழில் ஒன்றாக வாஜபேய யாகம் உள்ளது. அந்த யாகத்தின் இறுதியில் உணவும், பானமும் கூட்டாக அருந்தப்பெறும். பார்ப்பான் கெளணியன் விண்ணந்தாயன் செய்த யாகத்தில் புலவர் ஆவூர் மூலங்கிழார் கலந்து, விருந்துண்டதை அவரின் பாடல் வழி அறியமுடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com