பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

பட்ட வகையால் பலரும் வருந்தாமல்கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம்முட்டுடைத் தாகி இடைதவிர்ந்து வீழ்தலின்
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்


பட்ட வகையால் பலரும் வருந்தாமல்
கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம்
முட்டுடைத் தாகி இடைதவிர்ந்து வீழ்தலின்
நட்டறான் ஆதலே நன்று.  (பாடல் (197)

நல்லறம் செய்வதற்குப் பொருந்திய வகையினாலே, செய்யக் கருதிய நல்லறத்தைப் பலரும் வருத்தமடையாமல் ஒரு கட்டுக்கோப்பு உடையதாகவே செய்து வருவானாக. இடையில், இடையூறு ஏற்பட்டு, அதனால் இடையிலே நிறுத்துவதைவிட பயிரை நட்டு, காத்து, விளைய வைத்து, அறுத்துப் பயன் பெறாமல் போவதைவிட,  நடாமலிருப்பவனாய் இருத்தலே நல்லதாகும். "இடைதவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com