

தக்கமில் செய்கைப் பொருள்பெற்றால், அப்பொருள்
தொக்க வகையும் முதலும் அதுவானால்,
"மிக்க வகையால் அறஞ்செய்க!' என வெகுடல்
அக்காரம் பால்செருக்கும் ஆறு. (பாடல்-199)
மாறுபாடில்லாத செயல்களின் மூலமாகவே ஒருவன் பெரும் பொருள் பெற்றனன். அந்தப் பொருள் வந்து சேர்ந்த வகையும் அதற்கான முதலீடும் அப்படியே அறநெறிக்கு மாறுபாடில்லாதது. அங்ஙன மானால், "பலதிறப்பட்ட வகைகளால் எல்லாம் அறம் செய்வாயாக' என அவனிடம் சான்றோர் சினந்து கூறவேண்டாம். அப்படி அவர் கூறினாலும், அது சர்க்கரையில் பாலின் சுவை மயக்கமடையும் நிலைமையைப் போன்றதாகும். "அக்காரம் பால்செருக்கும் ஆறு' என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.