மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

நீர்வளம் நிறைந்த பொய்கைகள் மிகுதியாயிருக்கும் ஊரனே! பொருத்தமற்ற வேடிக்கைப் பேச்சினை ஒருவரால் எடுத்துச் சொல்லப்பட்டவர்கள், அவர் தம்மை வைதனர் என்றே கொண்டு, அவர் தொடர்பைக் கைவிட்டுவிடுவது தவறு.

News image
Updated On :13 பிப்ரவரி 2021, 6:30 pm

தினமணி

எய்தா நகைச்சொல் எடுத்துரைக்கப் பட்டவர்
வைதாரக் கொண்டு விடுவர்மன் - அஃதால்
புனற்பொய்கை ஊர! விளக்கெலி கொண்டு
தனக்கு நோய் செய்துவிடல் (பாடல்-189)


நீர்வளம் நிறைந்த பொய்கைகள் மிகுதியாயிருக்கும் ஊரனே! பொருத்தமற்ற வேடிக்கைப் பேச்சினை ஒருவரால் எடுத்துச் சொல்லப்பட்டவர்கள், அவர் தம்மை வைதனர் என்றே கொண்டு, அவர் தொடர்பைக் கைவிட்டுவிடுவது தவறு. அப்படிச் செய்வது, எலி விளக்கைக் கொண்டு ஏறி அதன் காரணமாக வீடே தீப்பற்றித் தனக்கே ஆபத்தைத் தேடிக் கொள்வது போன்றதாகும். "விளக்கெலி கொண்டு தனக்கு நோய் செய்துவிடல்' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.