மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

ஒருவன் தீமையாளன் என்று ஊரெல்லாம் பழிமிகுந்துவிட்டால், அதனைப் போக்கிக்கொள்ளத் தகுந்த சாட்சி எதுவுமே அவனுக்குக் கிடைப்பதற்கு வழியில்லை.

News image
Updated On :21 பிப்ரவரி 2021, 4:09 pm

தினமணி


தூய்மை மனத்தவர் தோழர் மனையகத்தும்
தாமே தமியர் புகல்வேண்டா - தீமையோன்
ஊர்மிகின் இல்லை கரியோ ஒலித்துடன்
நீர்மிகின் இல்லை சிறை. (பாடல்-190)

ஒருவன் தீமையாளன் என்று ஊரெல்லாம் பழிமிகுந்துவிட்டால், அதனைப் போக்கிக்கொள்ளத் தகுந்த சாட்சி எதுவுமே அவனுக்குக் கிடைப்பதற்கு வழியில்லை. வெள்ளம் ஆரவாரத்துடன் மிகுதியாகப் பெருகி வருமானால், அதைத் தடுத்து நிறுத்துவதற்கு ஒரு சிறையும் உலகிலே கிடையாது. இப்படியே ஊரிற் பெருகும் பழியையும் தடுக்க முடியாது. அதனால், தூய்மையான மனத்தை உடையவர்கள், தம் தோழருடைய வீட்டினுள்ளும்கூடத் தாமே தனியராக ஒருபோதும் செல்லுதல் கூடாது. "நீர்மிகின் இல்லை சிறை' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.